Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

91கிமீ ரேஞ்ச்.., சுசூகி இ ஆக்செஸ் ஸ்கூட்டரின் விற்பனைக்கு எப்பொழுது.?

by ராஜா
21 April 2025, 5:31 pm
in Bike News
0
ShareTweetSend

சுசூகி இ ஆக்செஸ்

இந்தியாவில் சுசூகி மோட்டார்சைக்கிள் வெளியிட உள்ள முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இ ஆக்செஸ் (e-Access) மாடலினை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் விற்பனைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

 Suzuki e-Access

இந்தியாவில் இ ஆக்செஸ் என்ற பெயரிலும் சர்வதேச அளவில் சில நாடுகளில் இ அட்ரஸ் என்ற பெயரிலும் விற்பனை செய்யப்பட உள்ள இ-ஸ்கூட்டரில் 3.07 kWH LFP பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 4.1 Kw மற்றும் 15 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 91 கிமீ ரேஞ்ச் (WMTC 87KM) வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 71 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு 0-80 % சார்ஜிங் ஏறுவதற்கு 4.30 மணி நேரமும், 0-100 % எட்டுவதற்கு 6.7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Suzuki e access boot space and headlight

இருபக்கத்திலும் 12 அங்குல வீல் பெற்று 1305 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ள எலெக்ட்ரிக் ஆக்செஸ் மாடலில் முன்புறத்தில் 90/90-12 54J மற்றும் பின்புறத்தில் 100/80-12 56J ட்யூப்லெஸ் டயருடன் முன்புறத்தில் 190 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று, டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

4.2 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற இ ஆக்செஸ் மாடலில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கீலெஸ் இக்னிஷன், eco, Ride A, மற்றும் Ride B என மூன்று ரைடிங் மோடுகளுடன் ரிவர்ஸ் மோடும், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. மெட்டாலிக் மேட் பிளாக் 2, பேர்ல் கிரேஸ் ஒயிட், மற்றும் பேர்ல் ஜேட் கிரீன் என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

இந்தியாவில் மார்ச் 2025ல் உற்பத்தி துவங்கப்பட்டு, ஏப்ரல் 2025ல் விற்பனைக்கு வரவுள்ள சுசூகி இ அக்செஸ் விலை ரூ.1.30 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Suzuki e access scooter

Suzuki e access Pearl Jade Green
Suzuki e access Metallic Mat Black 2
Suzuki e access pearl grace white
Suzuki e access scooter
Suzuki e access boot space and headlight
சுசுகி இ ஆக்சஸ்

Related Motor News

சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்

சுசூகி e அக்சஸ் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகின்றது

Tags: Suzuki E Access
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது

tvs e.fx30 electric

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம்

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம்

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ்

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

EICMA 2025ல் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டின் புல்லட் 650 ட்வீன் டீசர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan