Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Ola Electric

ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ரூ.89,999 ஆரம்ப விலையில் ஓலா ரோட்ஸ்டர் X பைக்கின் ரேஞ்ச் 242 கிமீ முதல் கிடைக்கின்றது.

By MR.Durai
Last updated: 11,February 2025
Share
SHARE

ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் சந்தையில் வந்துள்ள புதிய ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் 2.5Kwh, 3.5kwh, மற்றும் 4.5kwh என மூன்று வித பேட்டரி மாடல்களின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் முக்கிய சிறப்பு அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Contents
  • Ola Roadster X
  • 2025 Ola Roadster X electric Scooter on-Road Price in Tamil Nadu
  • 2025 ஓலா ரோட்ஸடர் எக்ஸ் நுட்பவிபரங்கள்
  • Ola Roadster X Rivals
  • Faq ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் ஸ்கூட்டர்
  • Ola Roadster X  Image Gallery

Ola Roadster X

கம்யூட்டர் சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை எலக்ட்ரிக் பைக் மாடலான ஓலா ரோட்ஸ்டரில் முன்புறத்தில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் உடன் பிரேக் பை வயர் நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பெற்று 4.3 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் உள்ளது.

ரோட்ஸ்டர் X 4.5Kwh பேட்டரி கொண்ட மாடல் 0-40 கிமீ வேகத்தை 3.1 விநாடிகளில் எட்டுகின்ற நிலையில் அதிகபட்சமாக 7KW(9.38hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 118 கிமீ கொண்டு முழுமையான 100 % சார்ஜிங் நிலையில் 252 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் பெற்றுள்ளது. ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ 3 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 190-200 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 5.90 மணி நேரம் போதுமானதாகும்.

0-40 கிமீ வேகத்தை 3.1 விநாடிகளில் எட்டுகின்ற ரோட்ஸ்டர் X  3.5Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 7KW (9.38hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 118 கிமீ கொண்டு முழுமையான சார்ஜிங் நிலையில் 196 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என 3 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 150 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 4.6 நேரம் தேவைப்படுகின்றது.

0-40 கிமீ வேகத்தை 3.4 விநாடிகளில் எட்டுகின்ற ரோட்ஸ்டர் X  2.5Kwh பேட்டரி கொண்ட மாடலில் அதிகபட்சமாக 7KW (9.38hp) பவர் வெளிப்படுத்தும் நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ கொண்டு முழுமையான 100 % சார்ஜிங் நிலையில் 140 கிமீ வழங்கும் என IDC சான்றிதழ் வழங்கப்பட்டு ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈக்கோ என 3 விதமான ரைடிங் மோடுகளை பெற்று உண்மையான நிகழ்நேரத்தில் 90-100 கிமீ பயணிக்கலாம். 0-80 % சார்ஜ் ஏற 6.2 மணி நேரம் போதுமானதாகும்.

மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் இரு பக்கத்திலும் டிரம் பிரேக்குடன், 2015 மிமீ நீளம், 831 மிமீ அகலம், 1235 மிமீ உயரத்துடன் 180மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 1301.9 மிமீ வீல்பேஸ் பெற்று 80/100-18 மற்றும் பின்புறத்தில் 110/80-17 டயருடன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது.

4.3 அங்குல எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ரைடிங் மோடுகள், மேம்ப் வசதிகள் , கால், எஸ்எம்எஸ் அலர்ட், ரிவர்ஸ் மோடு, ரோடு டிரிப் வசதி வழங்கப்படுகின்றது. மூன்று வருடம் அல்லது 40,000 கிமீ வாரண்டி வழங்கப்படும் நிலையில் கூடுலாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி 8 ஆண்டு அல்லது 1,25,000 கிமீ வரை பெற ரூ.14,999 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.

  • Ola Roadster X 2.5kWh – ₹ 89,999
  • Ola Roadster X 3.5kWh – ₹ 99,999
  • Ola Roadster X 4.5kWh – ₹ 1,09,999

(ex-showroom)

ola roadster x lcd cluster

2025 Ola Roadster X electric Scooter on-Road Price in Tamil Nadu

2025 ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் இ பைக்கில் உள்ள 2.5kwh, 3.5Kwh, 4.5kwh ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர், புதுச்சேரி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Ola Roadster X 2.5kWh – ₹ 1,08,654
  • Ola Roadster X 3.5kWh – ₹ 1,21,675
  • Ola Roadster X 4.5kWh – ₹ 1,32,210

(All Price on-road Tamil Nadu)

  • Ola Roadster X 2.5kWh – ₹ 1,08,345
  • Ola Roadster X 3.5kWh – ₹ 1,21,687
  • Ola Roadster X 4.5kWh – ₹ 1,32,287

(All Price on-road Pondicherry)

2025 ஓலா ரோட்ஸடர் எக்ஸ் நுட்பவிபரங்கள்

Ola Roadster X Specs  2.5Kwh/3.5kwh/4.5kwh
மோட்டார்
வகை எலக்ட்ரிக்
மோட்டார் வகை மிட் டிரைவ் IPM மோட்டார்
பேட்டரி 2.5Kwh/3.5kwh/4.5kwh Lithium ion
அதிகபட்ச வேகம் 101km/hr / 117 Km/h / 125km/h
அதிகபட்ச பவர் 7kw
அதிகபட்ச டார்க் –
அதிகபட்ச ரேஞ்சு 108/176/242 km per charge (IDC Claimed)
சார்ஜிங் நேரம் 9 மணி நேரம் (0-80%)/6 மணி நேரம் (0-80%)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டபூள்கார்டிள் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிக்
ரைடிங் மோட் Sports, Normal & Eco
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிரம்
பின்புறம் டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-18  ட்யூப்லெஸ்
பின்புற டயர் 110/80-17  / 100/90-17 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
ஹெட்லைட் எல்இடி
சார்ஜர் வகை 350W/Portable 750W
கிளஸ்ட்டர் 4.3 LCD டிஜிட்டல் கிளஸ்ட்டர்
பரிமாணங்கள்
நீளம் 2,015 mm
அகலம் 831 mm
உயரம் 1235 mm
வீல்பேஸ் 1301.9 mm
இருக்கை உயரம் 777 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 180 mm
பூட் கொள்ளளவு 3.27 Litre
எடை (Kerb) 123 kg/130.4 kg

ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ்  பைக்கின் நிறங்கள்

சில்வர், ஜெட் கருப்பு, வெள்ளை, நீலம், பச்சை, அன்தராசைட் என 5 விதமான நிறங்களை ரோட்ஸ்டர் எக்ஸ் மின்சார பைக் பெற்றுள்ளது.

ola roadster x electric silver
ola roadster x electric
ola roadster x electric bike blue
ola roadster x electric bike side
ola roadster x electric bike

Ola Roadster X Rivals

ஓலாவின் ரோட்ஸ்டர் பைக்கிற்கு போட்டியாக ஓபென் ரோர், ரிவோல்ட் ஆர்வி400 உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Faq ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் ஸ்கூட்டர்

ஓலா ரோட்ஸ்டர் X பைக்கின் பேட்டரி விபரம் ?

ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் 2.5Kwh, 3.5kwh, மற்றும் 4.5kwh என மூன்று வித பேட்டரி ஆப்ஷன் உள்ளது.

ரோட்ஸ்டர் X பைக்கின் ரேஞ்ச் விபரம் ?

ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கில் 2.5Kwh மாடல் 108 கிமீ ரேஞ்ச், 3.5kwh பேட்டரி பெற்ற மாடல் 176 கிமீ ரேஞ்ச் மற்றும் 4.5kwh பெற்ற மாடல் 252 கிமீ ஆகும்.

ரோட்ஸ்டர் X பைக்கின் ஆன் ரோடு விலை எவ்வளவு?

ரோட்ஸ்டர் X பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.34 லட்சம் வரை அமைந்துள்ளது.

Ola Roadster X  Image Gallery

ola roadster x electric bike
ola roadster x electric bike side
ola roadster x electric bike blue
ola roadster x electric
ola roadster x electric silver
ola roadster x led headlight
ola roadster x lcd cluster
ola roadster x plus electric bike
ஓலா ரோட்ஸ்டர் X+ எலெக்ட்ரிக் பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்புகள்
ஓலா S1 X, S1 X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஓலா S1 Pro+ எலக்ட்ரிக் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள், சிறப்புகள்
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
TAGGED:Ola Roadster X
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
Honda Shine 100 DX Pearl Igneous Black
Honda Bikes
ஹோண்டா ஷைன் 100DX விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved