Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூபாய் 1,68,499 விலையில் ஹோண்டா NX200 விற்பனைக்கு வெளியானது.!

by MR.Durai
13 February 2025, 10:03 pm
in Bike News
0
ShareTweetSend

ஹோண்டா NX200

CB200X என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட சில மாற்றங்களுடன் OBD-2B ஆதரவுடன் ஹோண்டா NX200 என்ற பெயரில் ரூ.1,68,499 (எக்ஸ்-ஷோரூம்)  விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2025 Honda NX200

NX500 பைக்கிலிருந்து பெறப்பட்ட டிசைன் உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைக்கு ஏற்ற அட்வென்ச்சர் டூரிங் மாடலாக வந்துள்ள புதிய என்எக்ஸ் 200 பைக்கில் தொடர்ந்து OBD-2B ஆதரவுடன் 184.4cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு  8500 RPMல் 16.76hp பவர் மற்றும் 6000 RPM-ல் 15.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் தற்பொழுது சிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

கோல்டு நிறத்தை கொண்டுள்ள புதிய அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்றுள்ள இந்த மாடலில் முன்புறத்தில் 276mm டிஸ்க் உடன் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் பின்புறத்தில் 220mm டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

17 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் 110/70 டயர் மற்றும் பின்புறத்தில் அகலமான 140/70 டயர் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புற வீலில் சாலைகளுக்கு ஏற்ற டிராக்‌ஷன் வெளிப்படுத்தும் வகையிலான ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) கொண்டுள்ளது.

புளூடூத் ஆதரவுடன் கூடிய ஹோண்டாவின் ரோட்சிங்க் ஆப் முறைக்கு ஏற்ற 4.2 இன்ச் TFT கிளஸ்ட்டருடன் டரன் பை டரன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் SMS அறிவிப்புகள் பெறவும் அனுமதிக்கிறது. கூடுதலாக புதிய USB C-வகை சார்ஜிங் போர்ட் உள்ளது.

அத்லெடிக் ப்ளூ மெட்டாலிக், ரேடியன்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் பேர்ல் இக்னியஸ் பிளாக் என மூன்று நிறங்களை பெறுகின்ற ஹோண்டா NX200 மாடல் இப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து HMSI ரெட் விங் மற்றும் பிக்விங் டீலர்ஷிப்களிலும் கிடைக்கிறது.

Related Motor News

No Content Available
Tags: Honda NX200
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

yamaha wr 155r bike india launch date

நவம்பர் 11ல் யமஹாவின் இந்திய அறிமுகம் யார்..! WR 155 R அல்லது XSR 155..?

டிவிஎஸ் அப்பாச்சி RTX 300 BIKE

டிவிஎஸ் அட்வென்ச்சர் டூரிங் அக்டோபர் 15ல் அறிமுகம்

ஏபிஎஸ் பெற்ற டிவிஎஸ் ரைடர் 125 விற்பனைக்கு வெளியானது

110cc டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அறிமுகமானது

125 மில்லியன் ஹீரோ பைக் விற்பனையை கொண்டாடும் சிறப்பு எடிசன் வெளியானது

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan