Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.3.37 லட்சம் விலையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
27 March 2025, 12:15 pm
in Bike News
0
ShareTweetSend

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் விலை

கிளாசிக் 350 மாடலை தொடர்ந்து அதனை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக்கின் ஆரம்ப விலை ரூ. 3.37 லட்சம் முதல் ரூ.3.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Royal Enfield Classic 650 price list

  • Bruntingthorpe Blue, Vallam Red – ₹ 3,37,000
  • Teal – ₹ 3,41,000
  • Black Chrome – ₹ 3,50,000

(EX-showroom)

இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆர்இ 650 வரிசையில் உள்ள 648சிசி பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ள கிளாஸிக் 650ல் 47hp பவரை 7250rpm-லும் 5,650rpm-ல் 52.3Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு வழக்கமான இரட்டை புகைப்போக்கி உள்ளது.

43மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் வழக்கமான ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது. ஸ்போக்டூ வீல் பெற்ற மாடலில் ட்யூப் டயருடன் முன்புறம் 100/90 – 19 57P மற்றும் பின்புறத்தில் 140/70-18 62P டயர் உள்ளது. முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் கிடைக்கின்றது.

பிளாக்கிங் க்ரோம், டீல், பர்ன்டிங் தோர்ப் ப்ளூ, மற்றும் வல்லம் ரெட் என 4 விதமான நிறங்களை பெறுகின்ற கிளாசிக் 650 மாடலின் டிசைனிங் அமைப்பில் பெரும்பாலான இடங்களில் கிளாசிக் 350 பைக்கினை நினைவுப்படுத்தினாலும், பீரிமீயம் வசதிகளை பெற்றதாக அமைந்துள்ளது.

இந்த மாடலின்  எல்இடி ஹெட்லைட் அமைப்பு, கிளஸ்ட்டர் உள்ளிட்டவை தொடர்ந்து கிளாசிக் மாடலுக்கு உரித்தான வடிவமைப்பினை வெளிப்படுத்தும் நிலையில்,  செமி அனலாக் கிளஸ்ட்டரை பெற்று கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ப்ளூடூத் இணைப்பின் மூலம் டர்ன் பை டர்ன் டிரிப்பர் நேவிகேஷனை பெற்றுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிள் மாடல் மற்ற RE 650சிசி மாடல்களுடன் பிஎஸ்ஏ கோல்டுஸ்டார் 650 பைக்கினை எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

புதிய கிளாசிக் 650 பைக்கினை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

EICMAவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650, பியர் 650 அறிமுகமாகிறது

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 அறிமுகம் எப்பொழுது ?

Tags: Royal Enfield Classic 650
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Harley-Davidson X440 T

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

tvs Ronin Agonda Edition

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan