Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

கூடுதல் வசதிகளுடன் 2025 மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா விலை விபரம்

By
Automobile Tamilan Team
ByAutomobile Tamilan Team
Follow:
Last updated: 8,April 2025
Share
2 Min Read
SHARE

2025 மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா

மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிராண்ட் விட்டாரா எஸ்யூவி 2025 ஆம் ஆண்டிற்கான மாடலில் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு, தற்பொழுது ரூ11.42 லட்சம் முதல் ரூ.20.68 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டெல்டா + ஹைபிரிட் என்ற கூடுதல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக Zeta (O), Zeta+ (O), Alpha (O) மற்றும் Alpha+ (O) போன்ற வேரியண்டுகளில் ஆப்ஷனலாக சன்ரூஃப் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள்,  எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் பெற்ற ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளில் பெற்றுள்ளது.

சமீபத்தில் வந்த 2025 டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைபிரிட் போல இந்த காரிலும் 15W USB-C சார்ஜிங் போர்ட்கள் மற்றும் LED ரீடிங் விளக்குகள் அனைத்து வகையிலும், எட்டு வழி எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை, காற்றோட்டமான முன் இருக்கைகள், பின்புற கதவு சன்ஷேடுகள் மற்றும் ஆம்பியன்ட் விளக்குகள் உள்ளன.

1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 103hp மற்றும் 136.8Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 2WD மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் கிடைக்கின்றன, அதே நேரத்தில் 4WD மாடலில் ஆட்டோமேட்டிக் மட்டும் உள்ளது. 12V ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டரின் உதவியுடன் மைல்டு ஹைபிரிட் பெற்ற இந்த எஞ்சின் கொண்ட மாடல் 21.12kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.

அடுத்து, 1.3 லிட்டர் மூன்று சிலிண்டர் ஹைபிரிட் எஞ்சின் அதிகபட்சமாக  92hp, 122Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் கூடுதலாக உள்ள பேட்டரி இணைந்து ஒட்டுமொத்தமாக  116hp, 141Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் இ-சிவிடி கியர்பாக்ஸ் பெற்று இந்த எஞ்சின் கொண்ட மாடல் 27.7kpl வரை மைலேஜ் வெளிப்படுத்துகின்றது.

2025 Maruti Suzuki Grand Vitara prices (Ex-showroom INR)
Smart Hybrid ALLGRIP Select Strong Hybrid
Sigma 11,42,000        
Delta 12,53,000
Delta AT 13,93,000 Delta+ e-CVT 16,99,000
Zeta 14,67,000
Zeta Dual Tone 14,83,000
Zeta (O) 15,27,000
Zeta Dual Tone (O) 15,43,000
Zeta AT 16,07,000 Zeta+ e-CVT 18,60,000
Zeta AT Dual Tone 16,23,000 Zeta+ e-CVT Dual Tone 18,76,000
Zeta AT (O) 16,67,000 Zeta+ e-CVT (O) 19,20,000
Zeta AT Dual Tone (O) 16,83,000 Zeta+ e-CVT Dual Tone (O) 19,36,000
Alpha 16,14,000
Alpha Dual Tone 16,30,000
Alpha (O) 16,74,000
Alpha Dual Tone (O) 16,90,000
Alpha AT 17,54,000 Alpha 4WD AT 19,04,000 Alpha+ e-CVT 19,92,000
Alpha AT Dual Tone 17,70,000 Alpha 4WD AT Dual Tone 19,20,000 Alpha+ e-CVT Dual Tone 20,08,000
Alpha AT (O) 18,14,000 Alpha 4WD AT (O) 19,64,000 Alpha+ e-CVT (O) 20,52,000
Alpha AT Dual Tone (O) 18,30,000 Alpha 4WD AT Dual Tone (O) 19,80,000 Alpha+ e-CVT Dual Tone (O) 20,68,000
6 சீட்டர் மாருதி சுசூகி XL6 காரின் மைலேஜ், வேரியண்ட் உட்பட அனைத்து முக்கிய வசதிகள்
ஹோண்டா ஜாஸ் காரின் விலை ரூ.7.49 லட்சத்தில் ஆரம்பம்
ரூ.6.95 லட்சத்தில் 2020 டாடா நெக்ஸான் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது
க்விட் காரின் ரெனால்ட் K-ZE எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டது – ஆட்டோ எக்ஸ்போ 2020
ரூ. 22,000 வரை 2025 நிசான் மேக்னைட் எஸ்யூவி விலை உயர்ந்தது..!
TAGGED:Maruti Suzuki Grand Vitara
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹோண்டா ஷைன் 125 பைக்
Honda Bikes
ஹோண்டா ஷைன் 125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
harley x440 bike specs and on-road price
Harley-Davidson
ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் விலை, மைலேஜ், சிறப்புகள்
honda activa white colour
Honda Bikes
2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
ஓலா S1 Pro
Ola Electric
ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved