Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

எம்ஜி வின்ட்சர் புரோ இவி காரில் என்ன எதிர்பார்க்கலாம்..?

By
ராஜா
Byராஜா
நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.
Follow:
Last updated: 3,May 2025
Share
1 Min Read
SHARE

windsor pro ev teaser

வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் வின்ட்சர் இவி அடிப்படையிலான பெரிய 50.6kWh பேட்டரி கொண்ட வின்ட்சர் புரோ இவி காரில் பல்வேறு நவீன வசதிகளுடன் லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

MG Windsor Pro EV ரேஞ்ச் என்ன ?

இந்தோனேசியா உட்பட சில நாடுகளில் கிடைக்கின்ற 50.6kWh பேட்டரி கொண்ட மாடலில்  சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 460 கிமீ  (CLTC) வரை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக தற்பொழுது சந்தையில் உள்ள 38kWh பேட்டரி மாடல் முழுமையான சார்ஜில் 332km (ARAI) என சான்றிதழ் பெறப்பட்டு உண்மையான ரேஞ்ச் 270-280கிமீ கிடைக்கின்றது.

வரவுள்ள வின்ட்சர் புரோ மாடலின் பவர் மற்றும் டார்க் ஆனது தற்பொழுது உள்ள 38kwh வேரியண்டடை போலவே 136PS அல்லது 100KW பவர் வழங்கும் PMSM மோட்டார் ஆனது 200 Nm டார்க் வெளிப்படுத்தும்.

விற்பனையில் உள்ள மாடலை போலவே மிகவும் ஆடம்பரமான இருக்கைகள், பல்வேறு இணையம் சார்ந்த நவீன வசதிகள், லெவல் 2 ADAS பாதுகாப்பு வசதி ஆகியவற்றுடன் சிறிய அளவிலான டிசைன் மாற்றத்தை கொண்ட அலாய் வீல் பெற்றிருக்கலாம்.

புதிய வின்ட்சர் இவி புரோ ஆரம்ப விலை ரூ.20 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஏற்கனவே சந்தையில் உள்ள மாடல் ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை பேட்டரியுடன் கூடிய விலை அமைந்துள்ளது.

விற்பனைக்கு வந்த நாள் முதலே எம்ஜி வின்ட்சர் அமோகமான வரவேற்பினை பெற்று 20,000 கூடுதலான விநியோகத்தை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

More Auto News

கியா காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்ட படம் வெளியானது
2017 டொயோட்டா ஃபார்ச்சூனர் TRD ஸ்போர்ட்டிவோ விரைவில்
லம்போர்கினி ஹுராகேன் RWD விற்பனைக்கு வந்தது
ரூ.3 கோடியில் மெர்சிடிஸ்-பென்ஸ் எலெக்ட்ரிக் G-Class அறிமுகம்.!
2021 எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி காரின் எதிர்பார்ப்புகள்
Maruti futro-e concept: மாருதி ஃப்யூச்சரோ-இ கான்செப்ட் அறிமுகம்
விலை ரூ. 35.99 லட்சம், ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 அறிமுகப்படுத்தப்பட்டது
2021 ஹூண்டாய் கோனா ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி டீசர் வெளியீடு
சர்வதேச அளவில் வெளியான ஹவால் கான்செப்ட் H எஸ்யூவி: ஆட்டோ எக்ஸ்போ 2020
விரைவில்., மஹிந்திரா தார் சிக்னேச்சர் எடிசன் அறிமுகம்
TAGGED:MG Windsor EVMG Windsor Pro EV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
hero hf deluxe pro on road price
Hero Motocorp
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved