வழக்கமான ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட ரூபாய் 27 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டு புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400 XC மாடல் ஆனது ரூ.2,94,147 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த புதிய மாடலில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் இப்பொழுது நாம் பார்க்க போகின்றோம். குறிப்பாக இந்த மாடல் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் முந்தைய ஸ்கிராம்பளர் 400 X மாடலை விட கூடுதலான சில அம்சங்கள் பெற்றிருப்பதுடன் கவர்ச்சிகரமான நிறங்கள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது.
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 XC சிறப்புகள்
TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன், சேஸிஸ் மெக்கானிக்கல் சார்ந்த பல்வேறு அம்சங்கள் மற்றும் பிரேக்கிங் உட்பட எந்த இடங்களிலும் பெரிதாக மாற்றம் இல்லாமல் அமைந்திருக்கின்ற இந்த மாடல் குறிப்பாக பாடி நிறத்திலான ஃபென்டர், ஃபிளை ஸ்கீரின், கூடுதலான ஆக்சஸரீஸ் சார்ந்த அலுமினியம் சம்ப் கார்டு, எஞ்சின் கார்டு மேம்பாடுகள் மற்றும் புதிய கிராஸ் ஸ்போக்டூ வீலில் டியூப்லெஸ் டயர் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
ரேசிங் மஞ்சள், கிரானைட், வெள்ளை என மூன்று நிறங்களை பெற்றதாக அமைந்துள்ளது.