பிரசத்தி பெற்ற ஹோண்டா ரீபெல் 500 க்ரூஸர் ரக மோட்டர்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.5.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு முதற்கட்டமாக குருகிராம், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Honda Rebel 500
மிகவும் சிறப்பான ரெட்ரோ தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அதே நேரத்தில் பெர்ஃபாமென்ஸ் கொண்ட ரீபெல் 500 மோட்டார்சைக்கிளில் 471cc லிக்யூடு கூல்டு, பேரலல்-ட்வீன் சிலிண்டர் எஞ்சின், பொருத்தப்பட்டு 8,500 RPM-ல் 46hp (34 kW) மற்றும் 6,000 RPM-ல் 43.3 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 6-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலின் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் ஷோவா ட்வீன் ஷாக் அப்சார்பர், பிரேக்கிங் அமைப்பினை பொறுத்தவரை முன்புறத்தில் 296 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பெற்று இரட்டை சேனல் ABS சேர்க்கப்பட்டுள்ளது.
டீயூப்லெர் ஸ்டீல் சேஸிஸ் கொண்ட ரீபெல் 500 மாடலின் முன்புறம் 130/90-16 முன் மற்றும் 150/80-16 பின்புற அலாய் வீலை பெற்றுள்ளது.
வெறும் 690 மிமீ மட்டும் இருக்கை உயரத்தை பெற்றுள்ள இந்த மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சத்துடன் விளங்கும் டேங்கினை பெற்றதாக அமைந்து வட்ட வடிவ எல்சிடி டிஸ்பிளேவினை கொண்டதாக அமைந்துள்ளது.
முதற்கட்டமாக குருகிராம், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி ஜூன் முதல் நடைபெற உள்ளது.