இந்தியாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் பிரீமியம் ரக X-ADV 750 ஸ்கூட்டரை ரூபாய் 11.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அனைத்து ஹோண்டா பிக்விங் டீலர்கள் வாயிலாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு ஜூன் 2025 முதல் டெலிவரியும் வழங்கப்பட உள்ளது.
சமீபத்தில் ரீபெல் 500 என்ற பிரீமியம் க்ரூஸர் ரக மாடலை அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது அடுத்த பிரிமியம் மாடலை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு பல்வேறு பிரிமியம் மாடல்களை இந்திய சந்தைக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
Honda X-ADV
6 DCT எனப்படுகின்ற டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெற்றுள்ள ஹோண்டாவின் X-ADV ஸ்கூட்டரில் 57.8bhp பவர் 6,750rpm-ல் மற்றும் 69Nm டார்க் ஆனது 4,750rpm-ல் வெளிப்படுத்தும் 745cc லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் சிலிண்டர் எஞ்சின் ஆனது பொருத்தப்பட்டுள்ளது.
பேர்ல் கிளேர் ஒயிட் மற்றும் கிராஃபைட் பிளாக் என இரு நிறத்துடன் இந்த ஸ்கூட்டரின் மற்ற வசதிகளில் குறிப்பாக, ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் (HSTC) மற்றும் ஸ்டாண்டர்ட், ரெயின், ஸ்போர்ட் மற்றும் கிராவல் என நான்கு விதமான ரைடிங் முறைகளும்
மேக்ஸி ஸ்டைலை பெற்ற இந்த ஸ்கூட்டர் மாடலில் பல்வேறு நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டு, எல்இடி ஹெட்லைட், ஹோண்டா ரோட்சின்க் ஆதரவுடன் கூடிய 5-இன்ச் TFT டிஸ்ப்ளே டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் மற்றும் இசை மற்றும் குரல் வழி கட்டுப்பாட்டை வழங்குகிறது.
ட்யூப்லெர் ஸ்டீல் சேஸிஸ் கொண்ட எக்ஸ்-அட்வெ மாடலில் 41மிமீ, USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 17-இன்ச் மற்றும் 15-இன்ச் உடன் வயர்-ஸ்போக் வீல் பெற்றுள்ளது.
முன்பக்கத்தில் இரட்டை 296மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பெற்று கூடுதலாக இரட்டை சேனல் ABS வசதி கொண்டுள்ளது.
X-ADV இந்தியாவில் உள்ள ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப்கள் வழியாக அல்லது வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்.