பலேனோ, ஐ20 மற்றும் கிளான்ஸா கார்களை எதிர்கொள்ளுகின்ற 2025 டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.6.89 லட்சம் முதல் ரூ.11.29 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து இந்தியாவில் ஹேட்ச்பேக் சந்தையில் கிடைக்கின்ற ஒரே டீசல் எஞ்சின் கொண்ட மாடலாக உள்ளது.
Tata Altroz
தொடர்ந்து அல்ட்ராஸில் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. இதில் மேனுவல், டிசிடி மற்றும் ஏஎம்டி என மூன்று கியர்பாக்ஸ் வசதி உள்ளது. CNG எரிபொருள் பெற்ற மாடல் 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 4000rpm-ல் 89PS பவர் மற்றும் 1250-3000rpm-ல் 200Nm வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றது.
மிகவும் புதுப்பிக்கப்பட்ட நவீன டிசைனை கொண்ட எல்இடி ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்துள்ள மாடலின் பம்பர் மற்றும் கிரில் அமைப்பு புதுப்பிக்கபட்டுள்ளது.
பக்கவாட்டில் புதிய ஃபிளெஷ் வகை கதவு கைப்பிடிகள், 16 அங்குல வீல் ஆனது கொடுக்கப்பட்டு ஏரோ டிசைனில் அமைந்துள்ளது. பின்புறத்தில் புதிய பம்பர் மற்றும் எல்இடி லைட்பார், டெயில் லைட் எல்லாம் மேம்படுத்தப்பட்டு மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றது.
டன் க்ளோ, எம்பர் க்ளோ, ராயல் ப்ளூ, ப்யூர் கிரே மற்றும் வெள்ளை என 5 விதமான நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
ஃபுளோட்டிங் முறையிலான 10.25 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்டர் போன்றவை எல்லாம் கொடுக்கப்பட்டு டிஜிட்டல் கிளஸ்டரில் இன்பில்ட் நேவிகேஷன் ஆக மேப்பும் வழங்கப்பட்டுள்ளது.
2025 Tata Altroz Price list
Petrol variants:
- Smart: Rs. 6.89 lakh
- Pure: Rs. 7.69 lakh
- Creative: Rs. 8.69 lakh
- Accomplished S: Rs. 9.99 lakh
Diesel variants:
- Pure: Rs. 8.99 lakh
- Accomplished S: Rs. 11.29 lakh
CNG variants:
- Smart: Rs. 7.89 lakh
- Pure: Rs. 8.79 lakh
- Creative: Rs. 9.79 lakh
- Accomplished S: Rs. 11.09 lakh
முன்பதிவு ஜூன் 2, 2025 முதல் துவங்கப்பட உள்ளது.