ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் Z கான்செப்ட் அடிப்படையிலான விடா VX2 வரிசை ஸ்கூட்டரின் ரேஞ்சு 95 கிமீ முதல் 200 கிமீ வரையில் வெளிப்படுத்தும் வகையில் 2.2kwh முதல் 4.4kwh வரை பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கலாம்.
தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 ஸ்கூட்டரில் 2.2kwh, 3.44kwh, மற்றும் 3.97 kwh என மூன்று பேட்டரி ஆப்ஷன் உள்ள நிலையில் வரவுள்ள விஎக்ஸ்2 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் 4.4kwh பேட்டரி பெறக்கூடும். இந்த மாடல் இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
நமக்கு கிடைத்துள்ள படத்தில் ஏற்கனவே சந்தையில் உள்ள வி2 மாடலின் சில முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொண்டாலும் குடும்பங்களுக்கு ஏற்ற வகையிலான டிசைனை வெளிப்படுத்துகின்ற விஎக்ஸ்2 பிளஸ், விஎக்ஸ்2 புரோ மற்றும் விஎக்ஸ்2 கோ ஆகியவற்றில் பொதவாக முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, 12 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றிருக்கும்.
முன்பக்கத்தில் 90/90-12 மற்றும் பின்புறத்தில் 90/100-12 டயரை பெறுகின்ற விடா விஎக்ஸ்2 பிளஸ் மாடலில் 7 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடுதலாக OTA மேம்பாடு, க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை பெறக்கூடும்
ஜூலை 1 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள விடா விஎக்ஸ்2 ஆரம்ப விலை ரூ.75,000 முதல் துவங்கி டாப் வேரியண்ட் ரூ.1.60 லட்சத்தில் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.