சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் e-access உற்பத்தி குருகிராம் ஆலையில் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடல் அனேகமாக அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக இ-அக்சஸ் மாடலின் அனைத்து முக்கிய விபரங்களையும் ஏற்கனவே சுசூகி ஆனது இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2025 மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளுர் சந்தை மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இந்த மாடலில் 3.072 kWH LFP பொருத்தப்பட்டு பவர் 4.1 Kw மற்றும் 15 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 91 கிமீ ரேஞ்ச் (WMTC 87KM) வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 71 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு 0-80 % சார்ஜிங் ஏறுவதற்கு 4.30 மணி நேரமும், 0-100 % எட்டுவதற்கு 6.7 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 55 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் eco மோட் மற்றும் அதிகபட்ச வேகம் 71 கிமீ எட்டும் Ride A ஆனது அதிகப்படியான ரீஜெனரேட்டிவ் திறனை வெளிப்படுத்தும், இறுதியாக Ride B மோடில் மணிக்கு 71 கிமீ வேகத்தை எட்டுவதுடன் குறைந்த ரீஜெனரேட்டிவ் அமைப்பு செயல்படும் வகையில் இந்த மூன்று ரைடிங் மோடுகளுடன் கூடுதலாக ரிவர்ஸ் மோடும் உள்ளது.
4.2 அங்குல TFT டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற இ ஆக்செஸ் மாடலில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கீலெஸ் இக்னிஷன் பெற்றதாக அமைந்து முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் வழங்கப்பட உள்ளது.
ஜூன் 2025ல் விற்பனைக்கு வரவுள்ள இ-அக்சஸ் ஸ்கூட்டரின் முதற்கட்ட அறிமுகத்தின் பொழுது 30க்கு மேற்பட்ட முன்னணி நகரங்களில் கிடைக்க துவங்கும், நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் கிடைக்க உள்ளது.