2009 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட லெஜெண்டர் ஆகிய மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 3,00,000 யூனிட்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது.
ரூ.35.37 லட்சம் விலையில் துவங்குகின்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடலில் 166ps, 204 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 204 PS பவர் மற்றும் 500 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 2.8லிட்டர் டீசல் எஞ்சின் என இரு ஆப்ஷன்களை பெற்று 4X2 மற்றும் 4X4 என இரண்டிலும் கிடைக்கின்றது.
2021 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட லெஜெண்டர், நவீன, நகர்ப்புற ஓட்டுநருக்காக வடிவமைக்கப்பட்ட மிகவும் ஆடம்பரமான மற்றும் அம்சங்கள் நிறைந்த அனுபவத்தை வழங்குவதன் மூலம் புதிய அனுபவத்தை வெளிப்படுத்துகின்றது.
பிரத்தியேக டூயல் டோன் ஸ்டைலிங், சிக்யூன்சியல் LED டர்ன் இண்டிகேட்டர், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 11-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட லெஜெண்டர், மிகவும் சுத்திகரிக்கப்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. மேம்பட்ட 4X4 லெஜெண்டர் ஆஃப்-ரோடு எஸ்கேப் மற்றும் நகர சாகசங்கள் இரண்டிற்கும் சிறந்த மாடலாக உள்ளது.
தற்பொழுது டொயோட்டா ஃபார்ச்சூனர், லெஜெண்டர் ஆன்ரோடு விலை ரூ.45 லட்சத்தில் துவங்கி டாப் வேரியண்ட் ரூ. 65 லட்சம் வரை கிடைக்கின்றது.