இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 ஆம் ஆண்டில் இறுதி மாதங்களில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் இந்நிறுவனம் முதலீட்டை மேற்கொண்டு இருந்த நிலையில் அந்த முதலீட்டின் அடிப்படையில் தான் தற்பொழுது புதிய ஸ்கூட்டர் ஆனது அந்நிறுவனத்தின் ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
ரிவர் நிறுவன இண்டி மின்சார ஸ்கூட்டரின் அடிப்படையிலான மாடலை தயாரிக்கின்ற யமஹா மாடலின் நுட்பங்கள் அனைத்தும் இண்டி மாடலில் இருந்து பெற்றிருக்கலாம். IP67 மதிப்பிடப்பட்ட 4kwh லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை கொண்டுள்ள இந்த மாடலின் உண்மையான ரேஞ்ச் 120 கிமீ வரை வழங்கும் என கூறப்படுகின்றது. இண்டி ஸ்கூட்டரில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்ட மோட்டார் 6.7Kw பவர் மற்றும் 26Nm டார்க் வெளிப்படுத்துகிறது.
3.9 விநாடிகளில் 0-40 கிமீ வேகத்தை எட்டும். அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டு, 800-watt சார்ஜரை கொண்டு சார்ஜிங் பெற 5 மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் சார்ஜ் செய்யலாம்.
டிசைன் அமைப்பில் மிகவும் முரட்டுதனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து 14 அங்குல அலாய் வீல் , உட்பட பக்கவாட்டு பேனல் என அனைத்திலும் மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.