நிசான் இந்தியாவின் மேக்னைட் சிஎன்ஜி அறிமுகத்தின் போது பேசிய நிசானின் எம்.டி. சவுரப் வத்சா பேசுகையில் எம்பிவி மாடல் 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களிலும், டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி 2026 மத்தியிலும், 7 இருக்கை எஸ்யூவி 2027 ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
ட்ரைபர் அடிப்படையிலான நிசான் எம்பிவி
சந்தையில் விற்பனையில் உள்ள பட்ஜெட் விலை எம்பிவி ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி காரை தயாரித்து வருகின்ற நிசான் இந்த மாடலை விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தைக்கு கொண்டு வரவுள்ளது.
பல்வேறு டிசைன் மாற்றங்களை பெற்று ட்ரைபரில் உள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், அதிகபட்சமாக 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக டர்போ பெட்ரோல் ஆப்ஷனும் இடம்பெற வாய்ப்புள்ளது.
டஸ்ட்டர் அடிப்படையிலான நிசான் C-பிரிவு எஸ்யூவி
இந்தியாவில் மீண்டும் ரெனால்ட் டஸ்ட்டர் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் அதன் ரீபேட்ஜிங் முன்பாக டெர்ரானோ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய சி-பிரிவு எஸ்யூவி புதிய பெயரை கொண்டதாக நிசான் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் கொண்டு வரவுள்ளது.
7 இருக்கை எஸ்யூவி 2027ல் அறிமுகம்
பிக்ஸ்டெர் எனப்படுகின்ற 7 இருக்கை டஸ்ட்டர் மாடலின் அடிப்படையில் வரவுள்ள 7 இருக்கை நிசான் எஸ்யூவி 2027 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிறுவனம் இந்திய சந்தையில் எலக்ட்ரிக், ஹைபிரிட் போன்ற வாகனங்களுக்கு முக்கிய்யதுவம் கொடுக்கவும், டீசல் எஞ்சின்களை கொண்டு வர வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ளது. இதுதவிர, பல்வேறு முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடல்களையும் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.