இந்தியாவில் 1,833 cc ஃபிளாட்-6 எஞ்சின் கொண்ட ஹோண்டா கோல்டுவிங் மாடலின் சிறப்பு 50 ஆண்டுகால கொண்டாட்ட பதிப்பினை ரூ.39.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான மாடலை விட ரூ.70,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் சர்வதேச சந்தையில் கிடைக்கின்ற சிறப்பு கோல்டுவிங் மாடல் முதன்முறையாக 1975 ஆம் ஆண்டு GL1000 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்துள்ளதை முன்னிட்டு போர்டியாக்ஸ் ரெட் மெட்டாலிக் மற்றும் எட்ரனல் கோல்டு என்ற டூயல் டோன் கொண்டுள்ளது.
1,833cc, லிக்யூடு கூல்டு, ஃபிளாட் ஆறு சிலிண்டர் எஞ்சின் 124bhp மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 7 வேக டிசிடி அல்லது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2025 கோல்ட் விங் வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை பெற்ற 7-இன்ச் TFT டிஸ்ப்ளேவில் இப்போது “1975 முதல்” என்ற வரவேற்பு செய்தி இடம்பெற்றுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் மற்றும் கூடுதல் அம்சங்களில் இரண்டு USB டைப்-சி போர்ட்கள், உள்ளமைக்கப்பட்ட ஏர்பேக் சிஸ்டம், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, த்ரோட்டில்-பை-வயர் (TBW) சிஸ்டம் மற்றும் டூர், ஸ்போர்ட், எகான் மற்றும் ரெயின் என நான்கு ரைடிங் மோடுகள் உள்ளது.
இந்தப் பதிப்பிற்கான முன்பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டு டெலிவரி ஜூன் 2025 முதல் தொடங்கும்.