மிகப்பெரிய ஆட்டோமொபைல் குழுமங்களில் ஒன்றான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SAVWIPL) நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் பிரிட்டிஷ் சொகுசு பிராண்டான பென்ட்லி கார்களை சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய செயல்பாடுகளையும் நிர்வகிக்கும்.
பென்ட்லி இந்தியாவின் பிராண்ட் இயக்குநராக அபே தாமஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு மற்றும் மும்பையில் தொடங்கி, பின்னர் புது டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் டீலர்களை துவங்க திட்டமிட்டுள்ளது.
புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் SAVWIPL மூலம் ஸ்கோடா, ஃவோக்ஸ்வேகன், ஆடி, பென்ட்லி, லம்போர்கினி மற்றும் போர்ஷே ஆகிய ஆறு பிராண்டுகளின் இந்திய செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.