முந்தைய மாடலை விட ரூ.12,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ள ரூ.3.03 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்துள்ள 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X பைக்கில் க்ரூஸ் கட்டுப்பாடு, 3 விதமான ரைடிங் மோடுகள், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்றை இடம்பெற்றுள்ளது.
-
Street, Rain, மற்றும் Off-Road போன்ற ரைடிங் மோடுகள் உள்ளது.
-
க்ரூஸ் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் உடன் டிராக்ஷன் கண்ட்ரோல் முக்கிய வசதியாகும்.
-
முன்புறம் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல பின்புற வீல் உடன் அட்ஜெஸ்ட செய்ய இயலாத சஸ்பென்ஷன் உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட எக்ஸ் வெர்ஷனில் தொடர்ந்து சில மேம்பாடுகளை வழங்கியுள்ள கேடிஎம் இதனால் ரைடர்களுக்கு சிறப்பான ரைடிங் அனுபவத்தை ஆஃப் ரோடு சாகசங்களில் பெறும் வகையில் கொடுத்துள்ளது.
தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிளில் புதிய 398.7cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர் இடம்பெற்றிருக்கின்றது.
90/90 டயரும் பின்புறத்தில் 140/80 டயரும் இடம்பெற்று பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் காரனரிங் சார்ந்த ஏபிஎஸ் பயன்பாடு ஸ்டீரிட், ரெயின் மற்றும் ஆஃப்ரோடு என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றதாகவும், நீண்ட தூர நெடுஞ்சாலை பயணத்துக்கு உதவுகின்ற க்ரூஸ் கட்டுப்பாடு மற்றும் டிராக்ஷன் கட்டுப்பாடு வசதிகளை இந்நிறுவனம் கொடுத்திருக்கின்றது.