வரும் ஜூலை 15, 2025 அன்றைக்கு இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் Y மற்றும் ஸ்டார்லிங்க் (Starlink) எனப்படுகின்ற செயற்கைகோள் வழியான இணைய சேவைக்கு இந்திய அரசு அனுமதித்துள்ளதை தொடர்ந்து எலான் மஸ்க் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக மும்பையில் நேரடியான விற்பனை மையத்தை டெஸ்லா துவங்க உள்ள நிலையில், முதன்ன்முறையாக இந்தியாவுக்கு வரவுள்ள மாடல் Y எஸ்யூவி ஜெர்மனியின் பெர்லின் ஆலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. எனவே, விலை ரூ.60 முதல் ரூ.70 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்த எலான் மஸ்கின் மிகப்பெரிய செயல்திட்டமான இணையம் சார்ந்த சேவையை அனைவரும் பெறும் வகையிலான செயற்கைகோள் வழியான இணைய சேவைக்கு இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட்டு மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.
ஜூலை 8ஆம் தேதி முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனுமதி அளித்துள்ளதை முன்னிட்டு இதனை துவங்கி வைக்கவும், டெஸ்லா கார்களை இந்தியாவில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.