ரெனால்ட் வெளியிட்டுள்ள டஸ்ட்டர் அடிப்படையிலான 7 இருக்கை பெற்ற போரியல் (Renault Boreal) எஸ்யூவி C-Segmentல் சுமார் 70க்கு மேற்பட்ட நாடுகளில் கிடைக்க உள்ள நிலையில் இந்திய சந்தையில் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கிடைக்கலாம்.
ரெனால்ட் போரியலின் உற்பத்தி மற்றும் அறிமுகம் 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரேசிலில் தொடங்கும், அதைத் தொடர்ந்து 2026 முதல் லத்தீன் அமெரிக்கா, துருக்கி மற்றும் பிற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
Renault Boreal SUV
டஸ்ட்டரை அடிப்படையாக கொண்ட பிக்ஸ்டெரில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள போரியலை பொறுத்துவரை வடிவமைப்பில் மிகப் பெரிதாக பல்வேறு பிரீமியம் வசதிகளை கொண்டிருப்பதுடன் சந்தைக்கு ஏற்ப மாறுபட்ட எரிபொருள் கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் பொருத்தப்பட உள்ள 1.3 TCe டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆனது பெட்ரோல் மற்றும் ஃபிளெக்ஸ் எரிபொருள் கொண்டு சந்தைக்கு ஏற்ப பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் ஆனால், இந்திய சந்தைக்கான மாடல் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பதிப்பிற்கு 163Hp, LATAM சந்தையில் பெட்ரோல் பதிப்பிற்கு 156hp மற்றும் துருக்கியில் பெட்ரோல் பதிப்பிற்கு 138hp. இது லாட்டமில் 270 Nm வரை மற்றும் துருக்கியில் 240 Nm வரை டார்க் வழங்குகிறது. 9.26 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுகின்றது.
4556 மிமீ நீளத்துடன் 2,702 மிமீ வீல்பேஸ் கொண்டு 1,841 மிமீ அகலத்துடன் காரின் உயரம் 1650மிமீ கொண்டு 213 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற போரியல் எஸ்யூவி “Nouvel’R” என்ற புதிய லோகோ டிசைனை கொண்டுள்ள கிடைமட்டமான கிரில் அமைப்புடன் புதிய எல்இடி ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லைட் கொண்டு பக்கவாட்டில் உயரமான வீல் ஆரசு பெற்று 19 அங்குல அலாய் வீல் கொண்டுள்ளது.
கருப்பு வண்ணப்பூச்சுடன் கூடிய இரண்டு-தொனி கூரை, அலுமினிய ஸ்கிட் பிளேட், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் கூரை ரெயில் கொண்டுள்ளது.
10 டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களுடன் 48விதமான நிறங்களை வழங்கும் ஆம்பியன்ட் லைட்டிங், முன்பக்கத்தில் 2 USB-C போர்ட், ஆட்டோமேட்டிக் ஏசி, பின்புறத்தில், 40/60 இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.
பூட் 586 லிட்டர் சுமை திறனை பெற்றுள்ள ரெனால்ட் போரியலில் கூடுதலாக பின்புற இருக்கையை மடிந்த நிலையில் 1,770 லிட்டர் கொண்டுள்ளது.
போரியல் SUVல் 24 விதமான பாதுகாப்பு சார்ந்த லெவல் 2 ADAS செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, இதில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹேண்ட்ஸ்-ஃப்ரீ பார்க்கிங் மற்றும் 360-வியூ கேமரா ஆகியவை கொண்டிருக்கின்றது.