வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஏதெர் நிறுவனத்தின் ஏதெரின் கம்யூனிட்டி 2025 தினமானது கொண்டாடப்பட உள்ள நிலையில் EL ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம் மற்றும் பல்வேறு புதிய கான்செப்ட்கள் உட்பட கூடுதலாக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்திருந்தபடி அடுத்த தலைமுறை ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் AtherStack 7.0 பல்வேறு மென்பொருள் மேம்பாடு சார்ந்த அமைப்புகள் மற்றும் பேட்டரி எஸ் ஏ சர்வீஸ் (BAAS) எனப்படுகின்ற பேட்டரியை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான திட்டம் போன்றவற்றையும் ஆகஸ்ட் 30ஆம் தேதி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்டாலும் கூட ஏதெர் எனர்ஜி மிக சிறப்பான வகையில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது, குறிப்பாக இந்நிறுவனத்தின் ரிஸ்டா மற்றும் 450 வரிசை எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.
மேலும், சமீபத்தில் விற்பனை செய்யப்படுகின்ற பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கின்ற நிலையில் இந்நிறுவனம் இது போன்ற ஒரு மாடலையும் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு கொண்டு வரும்பொழுது இந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய ஒரு பிளஸ் ஆக அமையும் எதிர்பார்க்கப்படுகின்றது