தென்தமிழ்நாட்டின் முதல் பெரிய எலக்ட்ரிக் கார் தாயாரிப்பாளராக நுழைந்துள்ள வியட்நாம் வின்ஃபாஸ்ட் நிறுவன VF6, VF7 என இரு மாடல்களுக்கும் முன்பதிவு கட்டணமாக ரூ.21,000 திரும்ப பெறும் வகையில் வசூலிக்கப்படுகின்றது. இந்த மாடல்களுக்கான விலை மற்றும் விநியோகம் ஆகஸ்ட் முதல் துவங்கலாம்.
க்ரெட்டா எலக்ட்ரிக் உட்பட கர்வ் இவி, பிஇ 6 என பலவற்றை எதிர்கொள்ள உள்ள VF6 மாடலில் VF Earth மற்றும் VF Wind என இரு வேரியண்டினை பெற்று 59.6kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 201hp பவர் வழங்கும் நிலையில் WLTP சான்றிதழ் படி 480 கிமீ உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்து க்ராஸ்ஓவர் ஸ்டைலை பெற்ற VF7 மாடலில் VF Earth, VF Wind, மற்றும் VF SKY என மூன்று வேரியண்டுகளை பெற்று FWD மற்றும் AWD என இரண்டிலும் கிடைக்க உள்ளது. 70.8kwh பேட்டரி பேக் பெற்று 204hp, 310Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 450கிமீ வெளிப்படுத்தும் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
20 அல்லது 21 அங்குல வீல் பெற்ற ஸ்கை வேரியண்ட் AWD 354hp, 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 0-100 % சார்ஜில் 431 கிமீ ரேஞ்ச் கிடைக்கலாம் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை உட்பட இந்தியாவின் 27 நகரங்களில் 32 டீலர்களை துவங்கியுள்ள வின்ஃபாஸ்ட் மேலும் பல்வேறு சார்ஜிங் நெட்வொர்க், சர்வீஸ் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டணி அமைத்துள்ளது.