இந்தியாவில் ரூ.1.26 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஏப்ரிலியா நிறுவனத்தின் புதிய எஸ்ஆர் 175 (Aprilia SR 175) மிகச் சிறப்பான ஸ்போர்ட்டிவ் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ள ஸ்டைலிஷான மாடலாக உள்ளதால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
முன்பாகவே விற்பனையில் இருந்த 160 சிசி இன்ஜினுக்கு பதிலாக தற்பொழுது வந்துள்ள புதிய 125சிசி ஏர் கூல்டூ இன்ஜின் ஆனது மூன்று வால்வுகளுடன் அமைந்திருக்கின்றது, அதிகபட்சமாக 12.92hp பவர் மற்றும் 14.14 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் மூலம் முந்தைய மாடலை விட 1.5 ஹெச்பி வரை கூடுதலான பவர் மற்றும் 1.14Nm வரை கூடுதலாக டார்க் அமைந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கதாகும்
குறிப்பாக இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ள கலர் டிஎஃப்டி ஆனது இதற்கு முன்பாக பிரிமீயம் சந்தையில் வெளியிடப்பட்ட ஏப்ரிலியா ஆர்எஸ்457, டூவானோ 457 போன்ற மாடல்களில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏப்ரிலியா SR 175 ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டரில் 14-இன்ச் அலாய் வீல் பெற்று 120-Section டயருடன் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோஷாக் உள்ளது. இதற்கிடையில், பிரேக்கிங் பணிகளை 220மிமீ முன் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக், ஒற்றை-சேனல் ABS பாதுகாப்பு கொடுக்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த மாடலுக்கு போட்டியாக ஹீரோ ஜூம் 160 மற்றும் பிரசத்தி பெற்ற யமஹா ஏரோக்ஸ் உள்ளது.