முன்பாக K300R என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட மாடல் தற்பொழுது கீவே RR 300 என்ற பெயரில் ரூ.1.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் மோட்டோவாலட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Keeway RR 300
மணிக்கு அதிகபட்சமாக 139 கிமீ வேகத்தை எட்டுவதுடன் 292cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் 8,750rpmல் 27hp பவர் மற்றும் 7,000rpmல் 25Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
12 லிட்டர் பெட்ரோல் டேங்குடன் மோட்டார்சைக்கிளின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்கை பெற்று பாசினெட் ட்ரெல்லிஸ் சேஸிஸ் உடன் பின்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் உள்ளது. RR300 பைக்கில் 110/70R17 மற்றும் பின்புறத்தில் 140/60R17 டயர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது, பிரேக்கிங் அமைப்பில் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
இந்தியாவில் கிடைக்கின்ற பிரபலமான டிவிஎஸ் அப்பாச்சி RR310, பிஎம்டபிள்யூ G 310 RR மற்றும் கேடிஎம் RC390 ஆகியவற்றுக்கு போட்டியாக கீவே ஆர்ஆர் 300 உள்ளது.
பெனெல்லி மற்றும் கீவே டீலர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில், ஸ்டைலிஷான ஃபேரிங் பேனல்களை பெற்று வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.