Close Menu
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) Instagram YouTube
Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Facebook X (Twitter) YouTube Instagram
Subscribe
Automobile Tamilan
Car News

GNCAP-ல் இந்திய நிசான் மேக்னைட் 5 ஸ்டார் ரேட்டிங் உண்மையா ?

By Automobile Tamilan TeamUpdated:24,July 202524,July 2025No Comments
Facebook Twitter WhatsApp Telegram
Share
Facebook Twitter WhatsApp Telegram

nissan magnite gncap

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற மிகவும் பிரபலமான காம்பேக்ட் மாடலான நிசான் நிறுவனத்தின் மேக்னைட் குளோபல் கிராஷ் டெஸ்ட் மையத்தால் சோதனை செய்யப்பட்ட முடிவுகளில் இருந்து நட்சத்திரம் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

ஆனால் இதில் மூன்று விதமான கார்கள் ஆனது சோதனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் இரண்டு ஏர்பேக்குகள் கொண்ட வேரியண்ட் வெறும் இரண்டு ஸ்டார் ரேட்டிங் மட்டுமே பெற்றிருக்கின்றது. ஆனால் இந்திய சந்தையில் தற்பொழுது கிடைக்கின்ற மாடல் 6 ஏர்பேக்குகள் கொண்டதாக அமைந்திருக்கின்றது.

Nissan Magnite GNCAP

அதே நேரத்தில், மற்றொரு 6 ஏர்பேக்குகள் கொண்ட மாடல் 4 ஸ்டார் ரேட்டிங்கை குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றிருக்கின்றது. மொத்தம் சோதனை செய்யப்பட்ட மூன்று கார்களின் முடிவுகளை GNCAP வெளியிட்டுள்ளது.

Global NCAP அறிக்கையில், இந்தியாவில்  நிசான் நிறுவனம் மேக்னைட்டில் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (ESC) போன்ற தொடர்ச்சியான பாதுகாப்பு மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியது, அதன் பிறகு அது ஒரு தன்னார்வ சுற்று சோதனைக்கு மாதிரியை சமர்ப்பித்தது. இந்தத் தொடர் சோதனைகள் மிகவும் மேம்பட்ட நான்கு நட்சத்திர மதிப்பீட்டை அளித்தன. திருப்தி அடையாத நிசான், மேக்னைட்டை மேலும் மேம்படுத்தி, இரண்டாவது தன்னார்வ சோதனைக்கு சமர்ப்பித்தது. இதன் விளைவாக, குளோபல் NCAP இன் தற்போதைய நெறிமுறைகளின் கீழ் தென்னாப்பிரிக்க சந்தையில் மிகவும் விரும்பப்படும் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற முதல் கார் இதுவாகும்.

குளோபல் NCAP நிறுவனம் இரண்டு ஏர்பேக்குகளுடன் கூடிய மேக்னைட்டை சோதனை செய்த நிலையில் இரண்டு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 34ல் 24.49 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பிற்காக 49ல் 18.39 புள்ளிகளையும் பெற்று 2 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

இரண்டாவது மாடல் ஆறு ஏர்பேக்குகளுடன் ESC கூடிய மேக்னைட்டை சோதனை செய்த நிலையில் நான்கு நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது, இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 34ல் 26.51 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பிற்காக 49ல் 36 புள்ளிகளையும் பெற்றது.

மூன்றாவது மாடலாக நிசான் அனுப்பிய 6 ஏர்பேக் ESC கொண்ட மாடலை சோதனை செய்த நிலையில், ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது, இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 34ல்  புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பிற்காக 49ல் 33.64 புள்ளிகளையும் பெற்று 3 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

magnite

இறுதியாக 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மேக்னைட் காரில் ஓட்டுநரின் மார்புக்கும், முன்பக்கத்தில் இருப்பவர்களின் முழங்கால்களுக்கும் ‘நல்ல’ பாதுகாப்பு. இரண்டு நிகழ்வுகளிலும் மேக்னைட்டின் உடல் ஓடு நிலையானதாகவும் மேலும் சுமைகளைத் தாங்கும் திறன் கொண்டதாகவும் மதிப்பிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பக்கவாட்டு தாக்கம் மற்றும் பக்கவாட்டு துருவ தாக்க சோதனைகளில் நல்ல பாதுகாப்பை வழங்குவதாகக் கருதப்பட்டது.

ஆனால் தற்பொழுது இந்திய சந்தையில் கிடைக்கின்ற மேக்னைட் எந்த தரத்தை கொண்டிருக்கும் என்பதனை விரைவில் நிசான் தெளிவுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Nissan Magnite
Follow on Google News
Share. Facebook WhatsApp Twitter Telegram Pinterest
Previous Article7 இருக்கை 2025 ரெனால்ட் ட்ரைபர் சிறப்புகள் மற்றும் விலை பட்டியல்
Next Article மாருதி சுசூகியின் XL6 காரிலும் 6 ஏர்பேக்குகள் வெளியானது

Related Posts

விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

இந்தியாவில் ரூ.74.99 லட்சத்தில் எம்ஜி சைபர்ஸ்டெர் வெளியானது

Live Search

Blocksy: Search Block

Posts

Facebook X (Twitter) YouTube Instagram Pinterest
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
© 2025 Automobile Tamilan.

Type above and press Enter to search. Press Esc to cancel.