டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக டூரிங் RTX300 அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய 300சிசி எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது.
ஆர்டிஎக்ஸ் 300ல் பெற உள்ள புதிய 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றதாக அமைந்திருக்கும்.
முன்பாக வெளியான சில படங்களில் இந்த பைக்கில் கோல்டன் நிறத்தை கொண்ட அப்சைடு டவுன் ஃபோர்க்கு சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் அமைந்துள்ள அப்பாச்சி RTX300 பைக்கில் டிஸ்க் பிரேக்குடன் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல வீல் பெற்றாலும் அலாய் வீல் பெற்றுள்ளது.
வழக்கமான ஆஃப் ரோடு சார்ந்த அனுபவங்களை விட கூடுதலாக நெடுஞ்சாலை பயணங்களுக்கு ஏற்ற வகையிலான டிசைனுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, குறிப்பாக ஐரோப்பா சந்தையில் கிடைக்கின்ற மாடல்களுக்கு இணையான வடிவமைப்பினை கொண்டுள்ளது.
விற்பனைக்கு ஆகஸ்ட் மாத மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் விலை அனேகமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.2.20 லட்சத்துக்குள் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது