மீண்டும் கைனடிக் நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் சந்தையில் இந்தியாவின் மிகவும் பழமையான DX பிராண்டினை எலக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி ரூ.1.11 முதல் ரூ.1.17 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்களாக உள்ள டிவிஎஸ் ஐக்யூப் 2.2Kwh, சேட்டக் 3001, விடா விஎக்ஸ்2 கோ, மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுகின்றது என்பதனை ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்களை தொகுத்து அறியலாம்
KInetic DX vs Rivals
இங்கே வழங்கப்பட்டுள்ள மாடலை தவிர ஓலா எஸ்1 எக்ஸ் போன்ற மாடலையும் கைனடிக் டிஎக்ஸ் எதிர்கொள்ளும் நிலையில் ரேஞ்ச் 116 கிமீ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சராசரியாக 40 கிமீ வேகத்தில் பயணித்தால் இதன் ரேஞ்ச் 70-80 கிமீ வரை கிடைக்கலாம்.
ஆனால் போட்டியாளர்களான ஐக்யூப் உண்மையான ரேஞ்ச் 75 கிமீ , சேட்டக் 3001 ஆனது 100 கிமீ வரையும், விஎக்ஸ்2 கோ மாடல் 70-75 கிமீ வரையும், மற்றும் ஹோண்டா க்யூசி 1 ஸ்கூட்டர் 45-50 கிமீ வழங்குகின்றது. இந்த மாடல்களில் விரைவு சார்ஜிங் வசதியை ஹீரோ விடா வழங்குகின்றது.
மாடல் பெயர் | ரேஞ்ச் (Range) | பேட்டரி திறன் (Capacity) | சார்ஜ் நேரம் (0-100%) |
---|---|---|---|
Kinetic DX | 102கிமீ-116 கிமீ | 2.6 kWh | 4 மணி நேரம் |
TVS iQube 2.2 | 100 கிமீ | 2.2 kWh | 5 மணி நேரம் |
Chetak 3001 | 123 கிமீ | 3.1 kWh | 4.5 மணி நேரம் |
Hero Vida VX2 Go | 94 கிமீ | 2.2 kWh | 3-4 மணி நேரம் |
Honda QC1 | 80கிமீ | 1.5 kWh | 4 மணி நேரம் |
டிஎக்ஸ் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ள நிலையில், டெலிமேட்டிக்ஸ் சார்ந்த அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது.
கைனடிக் டிஎக்ஸ் மாடலின் விலை ஒப்பீடு
குறிப்பாக பெரும்பாலான கனெக்ட்டிவ் வசதிகள், டிஜிட்டல் கிளஸ்ட்டர், ரிவர்ஸ் மோடு உட்பட பல்வேறு அம்சங்களை பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன. ஒரு சில வசதிகளை கூடுதலாக டிஎக்ஸ் பெற்றிருந்தாலும் கூட ஹீரோ விடா விஎக்ஸ் 2 கோ மிக குறைந்த விலையில் கிடைப்பதுடன் BAAS திட்டத்தையும் கொண்டிருக்கின்றது.
மாடல் பெயர் | எக்ஸ்-ஷோரூம் விலை |
---|---|
Kinetic DX | ₹ 1,11,499 – ₹ 1,17,499 |
TVS iQube 2.2 | ₹1,02,470 |
Chetak 3001 | ₹ 99,900 |
Hero Vida VX2 Go | ₹84,990 |
Honda QC1 | ₹ 90,022 |
ரேஞ்ச், பேட்டரி திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நாம் ஒப்பீடு செய்த பார்த்த முடிவில் நிச்சியமாக கைனடிக் டிஎக்ஸ் வாங்கும் பணத்தில் போட்டியாளர்கள் ஐக்யூப் , சேட்டக் 3001 மற்றும் விஎக்ஸ்2 கோ விலை குறைவாக உள்ளன.