பிரீமியம் பிராண்டு மாடலாக விளங்கும் ஜெனிசிஸ் கார்களை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதறகான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க், இந்திய சந்தையில் அதன் “அடுத்த அத்தியாயம்” என்று விவரிக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றி தகவல் வெளியாகியுள்ள நிலையில், 2029–30 நிதியாண்டுக்குள் 6 பேட்டரி மின்சார வாகனங்கள் (BEV) மற்றும் 20 ICE வாகனங்கள் உட்பட மொத்தமாக 26 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மாடல் குறித்தான கூடுதல் விவரங்கள் 2025 அக்டோபரில் ஹூண்டாயின் முதலீட்டாளர் கூட்டத்தில் பகிரப்படும். தலேகான் ஆலையின் உற்பத்தி 2025–26 நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் ICE மற்றும் EV பிரிவுகளில் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ ஜேஎல்ஆர் மற்றும் வால்வோ, ஆடி நிறுவனங்களின் பிரீமியம் சந்தைக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் ஜெனிசிஸ் பிராண்டு இந்தியாவிலே தயாரிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், உற்பத்தி சார்ந்த மேம்பாடுகளை மேம்படுத்தவும் ஹூண்டாய் திட்டமிட்டு வருகின்றது.
சர்வதேச அளவில் ஜெனிசிஸ் GV80, GV60, GV70 போன்ற எஸ்யூவி வரிசை மற்றும் G70, G80, G90, ஆகிய பிரீமியம் செடான்களும் கிடைக்கின்றது.