வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் X 125 மோட்டார்சைக்கிளில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் நவீனத்துவமான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று பல்வேறு புதிய நிறங்களை கொண்டதாக அமைந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
வழக்கமான 125சிசி கிளாமர் பைக்கிலிருந்து மாறுபட்ட பிரீமியம் வசதிகளுடன் க்ரூஸ் கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளதால் மிக நீண்ட தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக அமைந்திருக்கும், அதே வேளையில் ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மாடலை விட அதிக வெளிச்சம் வழங்கும் வகையிலான எல்இடி ஹெட்லைட் , விண்ட்ஷீல்டு சற்று உயரமாகவும், புதிய கலர் TFT கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், மைலேஜ் , பெட்ரோல் இருப்பினை கொண்டு பயணிக்கும் தொலைவை அறிவது என பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.
டாக்குமென்டுகளை வைப்பதற்கு கூடுதலாக இருக்கைக்கு அடியில் சிறிய அளவிலான ஸ்டோரேஜ் பாக்ஸ் பெற்று அதே நேரத்தில் சஸ்பென்ஷன் அமைப்பில் தொடர்ந்து முன்புறத்தில் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் இருக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கும்.
ரைட் பை வயருடன் கூடிய ஹீரோவின் நம்பகமான 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் வரவுள்ளது.
புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் விலை ரூ.1.10 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
image Source – Youtube/Singla group NCR