ரூ.18.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 மாடலில் 1,923cc, V-ட்வீன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ஸ்டீரிட் பாபில் 107CI எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த பைக்கில் கேஸ்ட் அலாய் வீல் உள்ள நிலையில், கூடுதலாக கிராஸ்-ஸ்போக் வீலை வாங்கினால் ரூ.87,000 கூடுதல் கட்டணமாகும்.
தற்பொழுது வந்துள்ள புதிய 117CI பைக்கில் 90 BHP @ 5,020 rpm மற்றும் 156 Nm @ 2,750 rpm-ல் வழங்கும் 1,923cc, V-ட்வீன் எஞ்சினுடன் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. மிக நீண்ட க்ரூஸிங் அனுபவத்தை வெளிப்படுத்துகின்ற ஸ்டீரிட் பாபில் க்ரூஸ் கட்டுப்பாடு, டிராக்ஷன் கட்டுப்பாடு, டிராக் கட்டுப்பாடு, ABS, மற்றும் 3 சவாரி முறைகள் உள்ளன.
அட்ஜெஸ்டபிள் இல்லாத 49மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் சரிசெய்யக்கூடிய மோனோஷாக் பெற்று இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் பெற்றுள்ளது. 13.2 லிட்டர் எரிபொருள் டேங்க் பெற்று 293 கிலோ கொண்டுள்ளது.
இந்த பைக்கில் மிக குறைந்த உயரம் பெற்ற தாழ்வான இருக்கை, உயர்த்தப்பட்ட கைப்பிடிகள், வட்ட வடிவ ஹெட்லேம்ப் மற்றும் ஒற்றை பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது.
பில்லியர்ட் கிரே மட்டுமே ரூ.18.17 லட்சத்திலும், விவிட் பிளாக் பெயிண்ட் ரூ.10,000 கூடுதலாகவும், சென்டர்லைன் (ஹார்லி மஞ்சள்) ரூ.14,000 கூடுதலாகவும், அயர்ன் ஹார்ஸ் மெட்டாலிக் (பச்சை) மற்றும் பர்பிள் அபிஸ் டெனிம் (மேட் ஃபினிஷ்) ஒவ்வொன்றும் ரூ.16,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.