டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் பிரிவின் கீழ் டொமினிக்கன் குடியரசு நாட்டில் சூப்பர் ஐஸ், செனான், அல்ட்ரா வரிசை (T.6, T.7, T.9) மற்றும் கட்டுமான தேவைகளுக்கான LPT 613 டிப்பர் என நான்கு மாடல்களை இக்யூமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விற்பனை, சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதன்மையான வர்த்தக வாகனங்கள் தயாரிப்பாளராக விளங்கும் டாடா உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன, 1 டன் எடையுள்ள மினி டிரக்குகள் முதல் 60 டன் எடையுள்ள கனரக டிரக்குகள் மற்றும் 9 முதல் 71 இருக்கைகள் கொண்ட பயணிகள் போக்குவரத்து வேன், பேருந்துகள் வரை கிடைக்கின்றது.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடன், இந்நிறுவனம் செயல்திறன், நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த செலவுத் திறன் ஆகியவற்றின் வாக்குறுதியை தொடர்ந்து வழங்குகிறது.
- சூப்பர் ஏஸ்: FMCG, இ-காமர்ஸ் மற்றும் உணவு விநியோகத்திற்கு ஏற்றது
- செனான் பிக்கப்: ஒற்றை மற்றும் இரட்டை கேபினில் கிடைக்கின்ற சரக்கு மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு ஏற்றது
- அல்ட்ரா ரேஞ்ச்: நகர்ப்புற பயன்பாடுகளுக்கான இலகு ரக டிரக்கில் (T.6, T.7, T.9) அடுத்த தலைமுறை ஸ்மார்ட் டிரக் தளத்தில் உருவாக்கப்பட்டது
- LPT 613: கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்காக வடிவமைக்கப்பட்டது.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களை தென்னாப்பிரிக்கா வெளியிட்டுள்ளது.