Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.10 லட்சத்தில் மாருதி சுசூகியின் புதிய எஸ்யூவி செப்டம்பர் 3ல் அறிமுகம்

By MR.Durai
Last updated: 21,August 2025
Share
1 Min Read
SHARE

maruti suzuki escudo spied

வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய எஸ்யூவி  Escudo அல்லது Victoris என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் நிலையில் மாருதியின் அரினா ஷோரூம்களில் விற்பனைக்கு வரவுள்ளதால் க்ரெட்டா உட்பட பல்வேறு போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது.

குறிப்பாக தற்பொழுது சந்தையில் உள்ள பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா என இரு மாடல்களுக்கு நடுவில் நிலைநிறுத்தப்பட உள்ள புதிய எஸ்யூவி விக்டோரிஸ் மாடலில் பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி என இரு ஆப்ஷன்களை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது சந்தையில் கிடைக்கின்ற கிராண்ட் விட்டாராவில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் எஞ்சினை பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதனால், மிக சிறப்பான மைலேஜ் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள இந்த புதிய எஸ்யூவி பின்புற பூட்ஸ்பேஸ் வழங்கும் வகையில் சிஎன்ஜி டேங்க் ஆனது அடிப்பகுதியில் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்டீரியரில் கிராண்ட் விட்டாராவை போல 9 அங்குல ஸ்மார்ட்பிளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே இணைப்பு ஆகியவற்றை பெறக்கூடும். கூடுதலாக பாதுகாப்பு சார்ந்தவற்றில் 6 ஏர்பேக்குகளுடன் மற்ற ESP,  ஹீல் ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவற்றுடன், தற்பொழுது வரும் பெரும்பாலான கார்களில் உள்ள ADAS சார்ந்த பாதுகாப்பினை பெறும் முதல் மாருதி மாடலாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலதிக விபரங்கள் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகின்றது.

BMW m340i 50 Jahre Edition
பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் ‘Jahre’ எடிசன் விற்பனைக்கு வந்தது
ரூ.48.50 லட்சத்தில் டொயோட்டா கேம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் சிறப்புகள்
மஹிந்திரா NU_IQ பிளாட்ஃபாரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்
மஹிந்திராவின் Vision T கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்
மஹிந்திரா Vision S எஸ்யூவி கான்செப்ட் வெளியானது
TAGGED:Maruti Suzuki EscudoMaruti Suzuki Victoris
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ ஜூம் 160
Hero Motocorp
ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
kawasaki w175 street
Kawasaki Bikes
கவாஸாகி W175 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
Royal Enfield goan classic 350 side
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved