Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Truck

ரூ.3.85 லட்சத்தில் டிவிஎஸ் கிங் கார்கோ HD EV டிரக் வெளியானது

By MR.Durai
Last updated: 21,August 2025
Share
SHARE

TVS King Kargo HD EV

நகர்புறம் மற்றும் வளர்ந்து வரும் நகரங்களுக்கு ஏற்ற சரக்கு எடுத்துச் செல்லும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் டிவிஎஸ் மோட்டாரின் கிங் கார்கோ HD EV  மூன்று சக்கர டிரக்கினை விற்பனைக்கு ரூ.3.85 லட்சம் முதல் துவங்குகின்றது. முதற்கட்டமாக டெல்லி, NCR (ஃபரிதாபாத், நொய்டா, குர்கான், காசியாபாத்) ராஜஸ்தான் மற்றும்
பெங்களூரு ஆகிய நகரங்களில் கிடைக்க துவங்கியுள்ளது.

8.9Kwh LFP பேட்டரியை பெற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் 156 கிமீ வெளிப்படுத்துகின்ற நிலையில் 3KW சார்ஜரை பயன்படுத்தி 0-100% சார்ஜிங் பெற வெறும் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனை பெற்று 6.6 அடி நீளமுள்ள தொட்டி கொடுக்கப்பட்டு வெவ்வேறு விதமான பாடி கட்டுமானத்தை கொண்டதாக அமைந்துள்ளது. குறிப்பாக கன்டெயினர், பிளாட் பெட், டிப்பர் என மாறுபட்ட கட்டுமானத்துக்கு ஏற்றதாக உள்ளது.

கிங் கார்கோ ஹெச்டி இவி மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது.

டிவிஎஸ் மோட்டாரின் Connect Fleet மூலம் நிகழ்நேர கண்காணிப்பு, தொலைதூர கட்டுப்பாடு, API, எச்சரிக்கைகள் மற்றும் டாஷ்போர்டில் உள்ளிட்ட 31 மேம்பட்ட அம்சங்களுடன் ஆபரேட்டர்களுக்கு அவர்களின் வாகனங்கள் மீது முழுமையான தெரிவுநிலை மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இது வணிகங்கள் சரக்கு நடவடிக்கைகளில் இயக்க நேரத்தையும் செயல்திறனையும் அதிகப்படுத்துவதை எளிதாக்குகிறது.

TVS King Kargo HD EV side

Bolero MaXX Pik-Up HD 1.9 CNG
மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் சிஎன்ஜி விற்பனைக்கு வெளியானது
குறைந்த விலை டாடா ஏஸ் புரோ மினி டிரக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்
ஏசி வசதியுடன் டாடா டிரக்குகள் விற்பனைக்கு அறிமுகமானது
மாருதி சுசூகி சூப்பர் கேரி டிரக்கில் ESP பாதுகாப்பு வசதி இணைப்பு.!
ரூ.8.99 லட்சத்தில் வந்துள்ள மஹிந்திரா வீரோ சிஎன்ஜி டிரக்கின் சிறப்பம்சங்கள்
TAGGED:TVS King Kargo HD EV
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 160r 4v
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
2025 Royal Enfield scram 440
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
bajaj pulsar n125 bike
Bajaj
பஜாஜ் பல்சர் N125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved