Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்

by MR.Durai
22 August 2025, 8:41 am
in Bike News
0
ShareTweetSend

ஹீரோ கிளாமர் எக்ஸ் 125

முதல் முறையாக 125cc சந்தையில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்ற ஹீரோ மோட்டோகார்ப் கிளாமர் X 125  பைக்கினை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய 5 மிக முக்கியமான அம்சங்களில் மைலேஜ், எஞ்சின், விலை உட்பட முக்கிய மாற்றங்களை அறியலாம்.

Cruise Control எப்பொழுது இயங்கும், எப்படி இயக்க வேண்டும்?

மணிக்கு 30 கிமீ வேகத்தை கடந்தால் க்ரூஸ் கண்ட்ரோல் இயங்க துவங்கும், இயக்க வலதுபுறத்தில் உள்ள க்ரூஸ் பொத்தானை அழுத்தினால் Set Speed என டிஸ்பிளேவில் வந்து பச்சை நிற லைட் எரியும் வேகத்தை க்ரூஸ் பொத்தானில் மேல் நோக்கி அழுத்தினால் வேகம் அதிகரிக்கும், கீழ் அழுத்தினால் வேகம் குறையும், அதிகபட்ச வேகத்தை நீங்களே முடிவு செய்யலாம், உங்களால் மணிக்கு 85 கிமீ வேகத்தில் கூட ஹீரோ கிளாமர் X க்ரூஸ் கன்ட்ரோலை இயக்க முடியும்.

க்ரூஸ் கட்டுப்பாட்டை செயல்படுத்தி விட்டால் த்ராட்டில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதனை செயலிழக்க செய்ய பிரேக் அழுத்தினாலும், கிளட்ச் லிவரை அழுத்தினாலும், அல்லது த்ராட்டில் இயக்க துவங்கினால் தானாக ஆஃப் ஆகி விடும்.

மைலேஜ் கிளாமர் எக்ஸ் 65 கிமீ தருமா ?

SPRINT EBT 124.7cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  8,250 rpm-ல் 11.4 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.4 Nm டார்க் பெற்ற பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65 கிமீ என இந்நிறுவனம் கூறியுள்ள நிலையில், நிச்சியமாக க்ரூஸ் கண்ட்ரோல் பயன்படுத்தி சீரான வேகத்தில் இயக்கினால் தாராளமாக உண்மையான கிளாமர் எக்ஸ் 125 மைலேஜ் லிட்டருக்கு 55 முதல் 60 கிமீ வரை கிடைக்கும்.

ஹீரோ கிளாமர் X 125 Cruise control

60க்கு மேற்பட்ட வசதிகளுடன் கூடிய கலர் கிளஸ்ட்டர்

அடாப்ட்டிவ் 4.2 அங்குல கலர் டிஸ்பிளே பெற்றுள்ள கிளாமர் எக்ஸில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் பல்வேறு வசதிகளை பெறுவதுடன் இயல்பாகவே மைலேஜ் விபரம், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், எஞ்சின் தொடர்பான அறிவிப்புகள் என சுமார் 60 விதமான பயட்பாடுகளை வழங்குகின்றது.

பல்வேறு சிறப்புகள்

AERA Tech  என்ற நுட்பத்தின் மூலம் ரைட் பை வயர் நுட்பத்தை பெற்று ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ளது.

Eco  மோடில் மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள நிலையில், ரோடு மோடு சிறப்பான பயண அனுபவத்தை வழங்குவதுடன், பவர் மோடு மூலம் சிறப்பான பிக்கப் அதிகப்படியான வேகத்தை எட்டுவதற்கு உதவுகின்றது.

hero glamour x aera tech

குறைந்த பேட்டரி கிக்ஸ்டார்ட் உதவி மூலம் பேட்டரி பேட்டரி சார்ஜ் நிலை குறைவாக இருக்கும்போது, ​​வால்வைத் திறக்க த்ரோட்டில் போதுமான மின்னோட்டத்தை அனுப்ப முடியாது. எனவே, இந்த பிரச்சனையை தீர்க்க கிக் ஸ்டார்ட்டை இயக்கும் பொழுது இதற்கு ஏற்ற வகையில் மின்சாரத்தை வழங்கி வால்வுகளை திறப்பதுடன் வண்டி இயங்க வழி வகுக்கின்றது.

ஹசார்டு லைட், ஹேண்டில் பார் 30mm கூடுதல் அகலத்துடன் 18 அங்குல அலாய் வீல், டைப்-C சார்ஜிங் போர்ட், விண்ட்ஸ்கிரீன் மற்றும் H-வடிவ DRL உடன் LED ஹெட்லைட், பானிக் பிரேக் அசிஸ்ட் என பலவற்றை பெற்றுள்ளது. குறிப்பாக டாப் டிஸ்க் பிரேக் வேரியண்டில் அதிகப்படியான வசதிகள் உள்ளது.  வின்ட்ஸ்கிரீன் கூடுதல் உயரத்தை விரும்பாதவர்கள் குறைந்த உயர ஆப்ஷனை தேர்வு செய்யலாம், கூடுதலாக பல்வேறு ஆக்செரீஸ் உள்ளது.

போட்டியாளர்கள் மற்றும் விலைப் பட்டியல்

ஹோண்டா எஸ்பி 125, சிபி 125 ஹார்னெட், பல்சர் 125, பல்சர் என்125, பல்சர் என்எஸ் 125, மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிய போட்டியாளர்களுடன் மற்ற கிளாமர் வேரியண்டுகள், எக்ஸ்ட்ரீம் 125 ஆர் மற்றும் சூப்பர் ஸ்ப்ளெண்டர், ஷைன் 125 போன்றவை கிடைக்கின்றது.

தமிழ்நாட்டில் ஹீரோ கிளாமர் எக்ஸ் விலை ரூ.91,999 முதல் ரூ.99,999 வரை அமைந்துள்ளது.

hero glamour x featuers

Related Motor News

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ரூ.15,743 வரை ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?

ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்

இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்

Tags: Hero GlamourHero Glamour X
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

new yamaha xsr155

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan