Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 26,August 2025
Share
SHARE

2025 renault kiger facelift on road price

ரெனால்ட் இந்தியாவின் பட்ஜெட் விலையில் கிடைக்கின்ற Kiger எஸ்யூவி மாடலில் சிறிய அளவிலான டிசைனை மேம்பாடுகளுடன், பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை கொண்டிருப்பதுடன், இன்டீரியரில் சிறிய மாற்றங்கள் பெற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 71bhp பவர் 1.0 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 99bhp பவர் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரு ஆப்ஷனுடன் மேனுவல், ஏஎம்டி, சிவிடி ஆகியவற்றில் கிடைக்கின்றது.

Renault Kiger on-road price

அறிமுக சலுகையாக சில ஆயிரங்கள் குறைவாக கிடைக்கின்ற ரெனால்ட் கிகர் 1.0 NA எஞ்சின் மேனுவல் ரூ.7.60 லட்சம் முதல் ரூ.11.24 லட்சம் வரையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் ரூ.9.13 லட்சம் முதல் ரூ.10.73 லட்சம் வரையும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ரூ.11.94 லட்சத்தில் மேனுவல் மற்றும் சிவிடி ரூ.11.95 லட்சம் முதல் ரூ.14.15 லட்சம் வரை ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது.

Variant Price  on-road Price 
Authentic 1.0NA MT Rs 6,29,995 Rs 7,59,865
Evolution 1.0 NA MT Rs 7,09,995 Rs 8,54,623
Evolution 1.0 NA AMT Rs 7,59,995 Rs 9,12,023
Techno 1.0 NA MT Rs 8,19,995 Rs 9,85,764
Techno 1.0 NA MT DT Rs 8,42,995 Rs 10,10,764
Techno 1.0 NA AMT Rs 8,69,995 Rs 10,43,064
Techno 1.0 NA AMT DT Rs 8,92,995 Rs 10,69,896
Techno 1.0 Turbo CVT Rs 9,99,995 Rs 11,96,764
Emotion 1.0NA MT Rs 9,14,995 Rs 10,98,654
Emotion 1.0NA MT DT Rs 9,37,995 Rs 11,21,876
Emotion 1.0 Turbo MT Rs 9,99,995 Rs 11,94,965
Emotion 1.0 Turbo CVT Rs 11,29,995 Rs 14,13,877
Emotion 1.0 Turbo MT DT Rs 9,99,995 Rs 11,94,965
Emotion 1.0 Turbo CVT DT Rs 11,29,995 Rs 14,13,878

அறிமுக சலுகை மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு டர்போ பெட்ரோல் வேரியண்டின் டூயல் டோன் நிறங்கள் தற்பொழுது ரூ.23,000 வரை விலை குறைவாக அமைந்துள்ளது.

2025 renault kiger facelift seats

ரெனால்ட் Kiger வாங்கலாமா ?

கிகர் டர்போ பெட்ரோல் வேரியண்டுகள் சிறப்பான 100hp பவர் மற்றும் டார்கினை பெற்றதாகவும், நெடுஞ்சாலை பயணங்களில் மணிக்கு 110 கிமீ வரை வேகத்தை எட்டுகின்றது. அடுத்த மைலேஜ் தொடர்பான அம்சங்களில் டர்போ டாப் வேரியண்டுகளின் சிவிடி 16 கிமீ வரை நெடுஞ்சாலையிலும், நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் 10 – 12 கிமீ லிட்டருக்கு கிடைக்கின்றது.

மேனுவல் கொண்ட டர்போ சராசரியாக நெடுஞ்சாலையி்ல் 18 கிமீ, உள்ளூர் போக்குவரத்து நெரிசலில் 10 கிமீ வரையும் கிடைக்கின்றது. ஓரளவு பூட்ஸ்பேஸ் சிறிய குடும்பங்களுக்கு ஏற்றதாகவும், தினசரி பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை பயணங்கள் அரிதாக உள்ளவர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

குறைந்த விலையில் கிடைக்கின்ற 1.0 NA மாடல்கள் விலை கவர்ச்சிகரமாக அமைந்தாலும் பவர் மிக குறைவு, கூடுதல் சுமைகளை எடுத்துச் சென்றால் மிகவும் நெடுஞ்சாலைகளில் சிரம்பபடுகின்றது. மற்றபடி, நகரங்களுக்கு ஏற்றது.

சர்வீஸ் சென்டர்களில் உதிரிபாகங்கள் சீராக கிடைக்கின்ற நிலையில், பராமரிப்பு செலவுகளும் ஓரளவு குறைவாகவே உள்ளது.

குறிப்பாக நம்முடைய பரிந்துரை டர்போ சிவிடி வேரியண்டுகளை தேர்வு செய்வது நல்லதொரு ஆப்ஷனாக இருக்கும்.

எஞ்சின் வகை (cc) பவர் டார்க் டிரான்ஸ்மிஷன் வகை
1.0L NA பெட்ரோல் 999cc 72bhp 96NM 5-வேக MT / 5 AMT
1.0L டர்போ பெட்ரோல் 999cc 100bhp 152NM (MT) / 160NM (CVT) 5-வேக MT / CVT

போட்டியாளர்கள் யார் ?

குறிப்பாக, 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள மற்ற நேரடியான போட்டியாளரான நிசான் மேக்னைட், மாருதி ஃபிரான்க்ஸ், டைசோர், உட்பட மற்ற நெக்ஸான், XUV 3XO, கைலாக், வெனியூ, கியா சொனெட் உள்ளிட்ட மாடல்களுடன் பிரெஸ்ஸா போன்றவை இதே விலைப்பட்டியலுக்குள் அமைந்திருக்கின்றது.

பாதுகாப்பில், தற்பொழுது 6 ஏர்பேக்குகள் பெற்ற கிகர் எஸ்யூவியில் கூடுதலாக ABS, ESC, TPMS, இழுவைக் கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ISOFIX மவுண்ட்கள் மற்றும் ஐந்து இருக்கைகளுக்கும் நினைவூட்டலுடன் கூடிய 3-புள்ளி சீட் பெல்ட்கள் உள்ளன.

2025 renault kiger facelift rear

வேரியண்ட் வாரியான வசதிகள் பின் வருமாறு;-

Kiger Authentic

ஆரம்ப நிலை மாடலில் 1.0 NA எஞ்சின் உடன் 16 அங்குல ஸ்டீல் வீல், எல்இடி ரன்னிங் மற்றும் டெயில் விளக்கு, ஹெட்ரெஸ்ட்களுடன் 60:40 பிரிந்த பின்புற இருக்கைகள், 3.5-இன்ச் LED இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேனுவல் ஏசி, நான்கு பவர் ஜன்னல்களும், ORVM-களுக்கான மேனுவல் அட்ஜஸ்ட், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, LED கேபின் விளக்குகள் போன்றவை உள்ளது.

Kiger Evolution

1.0 NA எஞ்சின் பெறுகின்ற இந்த வகையில் ஆத்தெனட்டிக் வேரியண்ட் வசதிகளுடன் பிரீமயம் அம்சங்களாக ஷார்க் ஃபின் ஆண்டெனா, ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளேவுடன், 8.0-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், 4 ஸ்பீக்கர்கள், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் ஃபோன் கட்டுப்பாடுகள், பின்புற ஏசி வென்ட்கள், எலக்ட்ரிக் ORVMகள், பின்புற பார்சல் ஷெல்ஃப், பகல்/இரவு சரிசெய்யக்கூடிய உட்புற பின்புறக் கண்ணாடி, டில்ட் சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல், ரியர் வியூ கேமரா உள்ளது.

Kiger Techno

LED ஹெட்லேம்ப்கள், கூரை தண்டவாளங்கள், 16-இன்ச் ஸ்டீல் வீலில் ஃபிளெக்ஸ் கவர், முன் மற்றும் பின்புற சில்வர் ஸ்கிட் பிளேட், இரட்டை வண்ண உட்புற அப்ஹோல்ஸ்டரி, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆட்டோ ஏசி, பின்புற வைப்பருடன் வாஷர், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் போன்றவை உள்ளது.

Kiger Emotion

டாப் எமோஷன் வேரியண்டில் 16-இன்ச் அலாய் வீல், LED மூடுபனி விளக்குகள், ஆட்டோ ஹெட்லேம்ப், சிவப்பு பிரேக் காலிப்பர்கள் (டர்போ மட்டும்), லெதர் அப்ஹோல்ஸ்டரி தோல் போர்த்தப்பட்ட ஸ்டீயரிங் வீல், வரவேற்பு/குட்பை விளக்குகள், 7.0-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் ஒலி அமைப்பு, டிரைவ் மோடுகள் க்ரூஸ் கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜர், பின்புற டிஃபோகர், குளிரூட்டப்பட்ட க்ளோவ் பெட்டி,  சுற்றுப்புற உட்புற விளக்குகள், ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் (டர்போ மட்டும்), காற்றோட்டமான முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா ஆகியவற்றை பெற்றுள்ளது.

2025 renault kiger facelift bootspace
2025 renault kiger facelift dashboard
2025 renault kiger facelift on road price
2025 renault kiger facelift rear
2025 renault kiger facelift seats
2025 renault kiger facelift side
2025 Renault Kiger interior
renault kiger
renault kiger
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
BE 6 பேட்மேன் எடிசனை 999 ஆக உயர்த்திய மஹிந்திரா
2026 ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி என்ன எதிர்பார்க்கலாம்.!
TAGGED:Car on-road priceRenault Kiger
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
New Hero Glamour X 125 on road price
Hero Motocorp
ஹீரோ கிளாமர் எக்ஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms