மாருதி சுசூகி நிறுவனதின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி e விட்டாரா உற்பத்தியை இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் 100 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்ய குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் கூட்டு முயற்சியாக சுஸுகி (50%), தோஷிபா (40%) மற்றும் டென்சோ (10%) ஹன்சல்பூரில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான ஏற்றுமதியைத் தொடங்கி வைப்பதற்காகவும், ஸ்ட்ராங் ஹைப்ரிட்களுக்கான லி-அயன் பேட்டரி செல் மற்றும் எலக்ட்ரோடு உற்பத்தியைத் தொடங்கப்பட்டுள்ளது.
இ விட்டாராவில் இந்தியா மட்டும் சர்வதேச அளவில் FWD வேரியண்ட் 49kwh பேட்டரி பெற்று 144 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், 61Kwh பேட்டரி பெறும் FWD வேரியண்ட் 174 PS பவர் மற்றும் 189Nm டார்க் வெளிப்படுத்தும், AWD டிரைவ் பெற்ற 61 kWh பேட்டரி மாடல் 184 PS பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்த டூயல் மோட்டாருடன் வரக்கூடும். ஆனால் இ விட்டாராவின் ஆல் வீல் டிரைவ் கொண்ட வேரியண்ட் இந்திய சந்தைக்கு மிகவும் தாமதமாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் டாப் 61Kwh பேட்டரி பெறும் FWD பெறுகின்ற மாடல் நிகழ்நேரத்தில் 500 கிமீ ரேஞ்ச் வழங்கலாம் என கூறப்படுகின்றது.
முதற்கட்டமாக சர்வதேச அளவில் இங்கிலாந்து, ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் கிடைக்க துவங்கியுள்ள விட்டாரா எலக்ட்ரிக் இந்திய சந்தைக்கு விரைவில் வெளியிடப்பட உள்ளது.