தற்பொழுது நடைமுறையில் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் 3% செஸ் வரி ஆனது 350சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு வசூலிக்கப்படும் நிலையில், வரும் மாதங்களில் 350சிசிக்கு குறைந்த திறன் பெற்ற அனைத்து பைக்குகளுக்கும் 18% ஜிஎஸ்டி வரி மற்றும் அதற்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு 40 % வரி விதக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற 97% இரு சக்கர வாகனங்கள் 350சிசி எஞ்சின் பிரிவுக்குள் அடங்குவதனால் பெரும்பாலான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் 18 % ஜிஎஸ்டி வரிக்குள் கிடைக்கலாம், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350cc வரிசைகளில் உள்ள பைக்குகள் 346cc எஞ்சின் பெறுவதால் 18% ஜிஎஸ்டி வரியை பெற வாய்ப்புள்ளது. ஹோண்டாவின் ஹைனெஸ், ஜாவா, பைக்குகளும் 350ccக்கு குறைந்த எஞ்சின்களை பெற்றள்ளது.
குறிப்பாக, 350ccக்கு மேல் எஞ்சின் பெற்ற மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகள், பஜாஜின் கேடிஎம், டிரையம்ப், ஹீரோ ஹார்லி-டேவிட்சன் உள்ளிட்ட நிறுவனங்களின் மாடல்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
350cc க்கும் குறைவான பிரிவு உள்நாட்டு இரு சக்கர வாகன சந்தையில் 97% ஆகும். இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) தரவுகளின்படி, FY25 இல், 350cc க்கும் குறைவான மோட்டார் சைக்கிள் பிரிவு 5% அதிகரித்து 12,079,779 ஆக உயர்ந்துள்ளது, இது FY24 இல் 11,522,954 ஆக இருந்தது.
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஸ்கூட்டர்களும் 350cc க்கும் குறைவான எஞ்சின்களைக் கொண்டுள்ளன. இந்தப் பிரிவு 17% அதிகரித்து FY25 இல் 6,853,214 ஆக உயர்ந்தது, இது FY24 இல் விற்கப்பட்ட 5,838,325 ஆக இருந்தது.
பைக்குகள் மட்டுமல்லாமல் குறைந்த திறன் பெற்ற கார்களுக்கும் ஜிஎஸ்டி வரி மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால், முக்கிய அறிவிப்பு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.