இந்திய சந்தையில் புதுப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வரிசையில் ஸ்கவுட் சிக்ஸ்டி முதல் சூப்பர் ஸ்கவுட் வரை 8 விதமான மாடல்கள் ரூ.12.99 லட்சம் ஆரம்ப முதல் ரூ.16.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) அமைந்துள்ளது.
ஸ்கவுட் சிக்ஸ்டி கிளாசிக், ஸ்கவுட் சிக்ஸ்டி பாபர் மற்றும் ஸ்போர்ட் ஸ்கவுட் சிக்ஸ்டி போன்ற மாடல்களில் 999cc, ஸ்பீட்பிளஸ் V-ட்வின், திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 85bhp மற்றும் 87Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ஸ்கவுட் கிளாசிக், ஸ்கவுட் பாபர், ஸ்போர்ட் ஸ்கவுட், மற்றும் சூப்பர் ஸ்கவுட் ஆகியவற்றில் 999cc, ஸ்பீட்பிளஸ் V-ட்வின், திரவ-குளிரூட்டப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 105bhp மற்றும் 108Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், டாப் 101 ஸ்கவுட் மாடலில் இதே எஞ்சின் பெற்றாலும் பவர் 111bhp மற்றும் 109Nm டார்க் ஆக இருந்தாலும் பொதுவாக 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
மேலும் டாப் 101 ஸ்கவுட் தவிர மற்ற மாடல்களில் கூடுதலாக Standard, Limited, மற்றும் Limited+Tech என மூன்று விதமான வகைகளில் உள்ளது.
ஸ்டாண்டர்டு வேரியண்டில் டிஜிட்டல்-அனலாக் கேஜ், முழு-எல்இடி லைட்டிங், முழுமையான கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது. லிமிடெட் வகையில் டிராக்ஷன் கட்டுப்பாடு, மூன்று ரைடிங் முறைகள் (ஸ்போர்ட், ஸ்டாண்டர்ட் மற்றும் டூர்), க்ரூஸ் கட்டுப்பாடு, பிற வண்ணங்கள் மற்றும் ஒரு யூ.எஸ்.பி சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
டாப் லிமிடெட்+டெக்கி்ல் 4-இன்ச் வண்ண TFT தொடுதிரை மற்றும் கீலெஸ் இக்னிஷன், TFT டிஸ்ப்ளே ஆன்-போர்டு நேவிகேஷன், டோவிங்/விபத்து எச்சரிக்கைகள், வாகன இருப்பிடம் மற்றும் இரண்டு வெவ்வேறு திரை அமைப்புகளைக் கொண்டுவருகிறது.
Model | Price (Ex-showroom) |
Scout Sixty Bobber | Rs. 12.99 Lakh |
Sport Scout Sixty | Rs. 13.28 Lakh |
Scout Sixty Limited | Rs. 13.42 Lakh |
Scout Bobber | Rs. 13.99 Lakh |
Scout Classic | Rs. 14.02 Lakh |
Sport Scout | Rs. 14.09 Lakh |
101 Scout | Rs. 15.99 Lakh |
Super Scout | Rs. 16.15 Lakh |