டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 3.1Kwh பேட்டரி ஆப்ஷனை பெற்று 158கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிசெய்யப்பட்டு விலை ரூ.99,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக அறிவிக்கப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.5,001 வசூலிக்கப்படுகின்றது.
ஒற்றை வேரியண்டை பெற்றுள்ள ஆர்பிட்டரில் கவனிக்க வேண்டிய அம்சங்களாக க்ரூஸ் கண்ட்ரோல், ஹீல் ஹோல்டு அசிஸ்ட், எல்சிடி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ட்டியன் காப்பர். 6 விதமான நிறங்களை பெற்றதாக கிடைக்கின்றது.
TVS Orbiter மோட்டார், ரேஞ்ச் விபரம்
BLDC மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 2.5Kw வெளிப்படுத்தும் நிலையில் மணிக்கு அதிகபட்ச வேகம் 68 கிமீ ஆக வரையறுக்கப்பட்டு 0-60 கிமீ வேகத்தை எட்ட 6.8 விநாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில் 3.1Kwh பேட்டரியை பெற்று சிங்கிள் சார்ஜில் 158 கிமீ வெளிப்படுத்தும் என சான்றிதழ் பெற்றுள்ளது.
எனவே, உண்மையான ரேஞ்ச் 120 கிமீ முதல் 125 கிமீ வரை வழங்க வாய்ப்புள்ள நிலையில், 650 Watts சார்ஜர் கொடுக்கப்பட்டு 0-80 % எட்டுவதற்கு 4 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் என குறிப்பிட்டுள்ளது.
ஆர்பிட்டரின் முன்புறத்தில் 14 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 12 அங்குல வீல் பெற்று இருபக்கத்திலும் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 34 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது.
இந்த மாடல் நவீனத்துவமான டிசைனை கொண்டு வைஷருடன் கீழ் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப் பெற்று தட்டையான இருக்கை அமைப்பினை கொண்டு 845 மிமீ நீளம் உள்ளது. 5.5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகள், SMS மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட எச்சரிக்கைகள், மொபைல் பயன்பாட்டில் பேட்டரி சார்ஜ் மற்றும் ஓடோமீட்டரை தொலைவிலிருந்து சரிபார்க்கலாம்.
குறிப்பாக போட்டியாளர்களிடம் இருந்து மாறுபட்ட டிசைன் வடிவமைப்பினை கொண்டு ரூ.1 லட்சம் விலைக்குள் 120 கிமீ ரேஞ்ச் உண்மையான மைலேஜ் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் Eco, City என இரு விதமான ரைடிங் மோடுகளை உள்ளன.
போட்டியாளர்களாக ஏதெர் ரிஸ்டா, விடா விஎக்ஸ்2, சேட்டக் 3001, ஓலா S1, ரிவர் இண்டி உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.