ரெனால்ட் இந்தியாவின் ட்ரைபர், கிகர் என இரண்டின் அறிமுகத்தை தொடர்ந்து க்விட் ஃபேஸ்லிஃட் மாடலை அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில், குறிப்பாக பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டிருக்கலாம்.
2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் விலை க்விட் ஆனது ஆரம்பத்தில் 0.8லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரு என்ஜின் ஆப்ஷனை பெற்றிருந்த நிலையில் காலப்போக்கில் மாசு உமிழ்வு மேம்பாடுகளை தொடர்ந்து 0.8 லிட்டர் என்ஜின் நீக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டது.
தற்பொழுது E20 ஆதரவினை பெற்ற க்விட் 67bhp மற்றும் 91Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் மேனுவல் மற்றும் ஏஎம்டி இரு ஆப்ஷனில் கிடைக்கின்றது. வரவுள்ள க்விட் ஃபேஸ்லி்ஃப்ட் மாடல் புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பர் மாற்றப்பட்டு, ரெனால்டின் புதிய இன்ட்ர்லாக்டூ டைமண்ட் லோகோ பெற்று எல்இடி ஹெட்லைட் மேம்படுத்தப்படலாம்.
இன்டீரியரில், தற்பொழுது உள்ள வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு இருக்கை மற்றும் டேஸ்போர்டின் நிறங்களில் மாற்றம் பெற்று சில கூடுதலான வசதிகள் பெற்றிருக்கலாம். வரவிருக்கும் புதிய க்விட்டில் 6 ஏர்பேக்குகள் அனேகமாக அடிப்படையான பாதுகாப்புடன் இஎஸ்பி போன்றவற்றை கொண்டிருக்கலாம். விற்பனைக்கு அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் சந்தைக்கு வரக்கூடும்.
குறிப்பாக மாருதி சுசூகி ஆல்ட்டோ கே10, ஆல்டோ செலிரியோ உள்ளிட்ட மாடல்களை க்விட் எதிர்கொள்ளுகின்றது.