ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மோட்டோ-ஸ்கூட்டருக்கு இணையான பிரீமியம் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற ரெட்க்ஸ் (Redux) கான்செப்ட் மாடல் பல்வேறு நவீன அம்சங்களுடன் பெர்ஃபாமென்ஸ் சார்ந்தவற்றை கொண்டுள்ளது.
குறிப்பாக, இந்த மாடல் உற்பத்தி எப்பொழுது வரும் நுட்பவிபரங்கள் போன்றவற்றை தற்பொழுது அறிவிக்கவில்லை என்றாலும் நவீன அம்சங்களை மற்ற எதிர்கால ஏதெரின் ஸ்கூட்டர்களில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
மிகசிறப்பான ரைடிங் டைனமிக்ஸ் கொண்டதாக விளங்கும் ரெட்க்ஸில் இலகு எடை கொண்ட அலுமினிய சேஸிஸ் கொடுக்கப்பட்டு 3D முறையில் அச்சிடப்பட்ட லேட்டிஸ் மெஷ் இருக்கை மற்றும் ஆம்ப்ளிடெக்ஸிலிருந்து தயாரிக்கப்பட்ட பேனல்களை கொண்டுள்ளது.
பின்புறமாக நகரும் ஃபுட்பெக்குகள் கொடுக்கப்பட்டுள்ளதால் ரைடிங் முறையை மாற்றிக் கொள்ளவும், உயர்த்தவோ அல்லது குறைக்கவோ கூடிய ஆக்டிவ் சஸ்பென்ஷன், நகரும் திரைகள் பெற்று தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, இது மோர்ஃப்-UI எனப்படும் புதிய இடைமுகத்தைப் பெறுகிறது, இது சவாரி முறைக்கு ஏற்ப அதன் அமைப்பை மாற்றுகிறது, வெவ்வேறு தகவல்களை முன் மற்றும் மையமாக வைக்கிறது.
பல அதி நவீன வசதிகள் கொண்டிருப்பதுடன் எதிர்கால மின்சார டிரைவ் ட்ரெய்ன்களில் சாத்தியமான விரைவான வேகத்தை எட்டுவதை ஏதெர் “டேக் ஆஃப்” என்ற ரைடிங் மோடினை சேர்த்துள்ளது, இருப்பினும் புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த மாடல் உற்பத்திக்கு செல்லும் வாய்ப்புகள் மிக குறைவு, ஆனால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள நுட்பங்கள் எதிர்கால ஏதெர் எனர்ஜி வாகனங்களில் பயன்படுத்தலாம்.
ஏதெரின் கம்யூனிட்டி தினத்தில் EL01 ஸ்கூட்டர், க்ரூஸ் கண்ட்ரோலுடன் 450 ஏபெக்ஸ், ரிஸ்டா ஸ்கூட்டரில் புதிய வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.