2025 ஏதெர் எனர்ஜி கம்யூனிட்டி தினத்தில் பல்வேறு சுவாரஸ்யமான நுட்பங்கள், மேம்பாடுகள் மற்றும் EL01 கான்செப்ட், ரெட்க்ஸ் கான்செப்ட் ஆகியவற்றுடன் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றை வெளியிட்டுள்ள நிலையில், ஏதெர்ஸ்டேக் 7.0 மென்பொருள் மேம்பாடு, 6KW விரைவு சார்ஜர் அறிமுகம் செய்துள்ளது.
ஏதெர் ஃபாஸ்ட் சார்ஜர்
தற்பொழுது ஏதெர் 3300+ சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் கொண்டுள்ள நிலையில் தற்பொழுது 1 நிமிடத்திற்கு 1 கிமீ வேகத்தில் சார்ஜிங் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக கொண்டு வந்துள்ள 6 kW சார்ஜர் தற்போதைய ஃபாஸ்ட் சார்ஜரை இரட்டை வேகத்தை வழங்குகிறது, இதனால் ஏதெர் மாடல்கள் வெறும் 10 நிமிடங்களில் 30 கிமீ ரேஞ்ச் அளவுக்கு சார்ஜிங் ஆகும் திறனை பெற்றுள்ளது, அதாவது முந்தைய சார்ஜரில் 30 நிமிடங்கள் தேவைப்படும் நேரத்தை வெறும் 10 நிமிடங்களாக குறைத்துள்ளது.
இந்த சார்ஜர்களுடன் இப்போது உள்ளமைக்கப்பட்ட டயர் இன்ஃபிளேட்டரும் உள்ளது. வேகமான சார்ஜர்கள் குறைந்த அழுத்தத்தைச் சமாளிக்கவும் வரம்பை அதிகரிக்கவும் உள்ளமைக்கப்பட்ட வசதியை கொண்டு LECCS தரநிலையுடன், ஏதெர் மட்டுமல்லமல் ஹீரோ விடா, மேட்டர் போன்ற OEMகள் மற்றும் Bolt, Kazam, EVamp போன்ற சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்கள் உட்பட 10க்கு மேற்பட்ட இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏதெர் ஹாலோ ஸ்மார்ட் ஹெல்மெட்
ரூ.2,999 விலையில் ஆஃப் ஃபேஸ் ஹெல்மெட் மற்றும் ரூ.4,999 முதல் முழு ஹெல்மெட் வழங்கப்படும் நிலையில் இந்த ஹாலோ ஹெல்மெட்களில் USB-C சார்ஜிங், பின்லாக் இயக்கப்பட்ட வைஷர் (மூடுபனியை தவிரக்க), தேய்மானம் கண்டறிதல், அவசர காலங்களில் பேடிங்கை விரைவாக அகற்ற அனுமதிக்கும் அவசர புல்-அவுட் பேடிங் உள்ளது.
AtherStack 7.0 சிறப்புகள்
மென்பொருள் சார்ந்த மேம்பாடுகளி்ல் குறிப்பாக சாலைகளில் உள்ள குழிகள், பள்ளங்கள் மற்றும் பேட்ச் வொர்க் உள்ளிட்ட சிரமங்கள் எதிர்கொள்ளும் இடங்களை கண்டறிந்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் முறையில் potholes எச்சரிக்கை முதற்கட்டமாக சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, புனே நகரங்களில் கிடைக்க உள்ள இந்த எச்சரிக்கை கன்சோலிலும் குரல் எச்சரிக்கையாகவும் வருகிறது.
இ-ஸ்கூட்டரின் பல்வேறு அம்சங்களை அணுக உதவும் குரல் கட்டளைகளும், மழை முன்னறிவிப்பு ஏற்பட்டால், பொருத்தமான ரைடிங் முறை மற்றும் டிராக்ஷன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்த தேவைப்பட்டால் ரைடரை முன்கூட்டியே எச்சரிக்கிறது.
Crash Alert வசதி மூலம் சிறிய மற்றும் பெரிய விபத்துகளை பிரித்து, நேரடி இருப்பிடத்துடன் 3 அவசர தொடர்புகளுக்கு தானாக தகவல் அனுப்பும். அதேசமயம் முக்கிய ரைடருக்கு விவரங்களை டேஷ்போர்டில் காட்டும்.
2021-ல் அறிமுகமான திருட்டை தடுக்கும் எச்சரிக்கையை மேம்படுத்தி, பாதுகாப்பற்ற பார்க்கிங் இடங்களை உரிமையாளருக்கு அறிவிக்கும். LockSafe என்ற வசதி மூலம் மொபைல் ஆப்பின் மூலம் ஸ்கூட்டரை தொலைவில் அசையாமல் (immobilize) செய்யும் வசதி உள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் எங்கிருந்தும் சார்ஜ் தொடங்க / நிறுத்துவதற்கான வசதி உள்ளது.
AtherStack 7.0 மேம்பாடு விரைவில் OTA அப்டேட்டாக ரிஸ்டா Z மற்றும் Ather 450X (Gen 3 வரை) உள்ள மாடல்களுக்கும் கிடைக்க துவங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
450 ஏபெக்ஸ் ஸ்கூட்டரில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டெர்ராகோட்டா சிவப்பு நிறத்தை ரிஸ்டா பெற்றுள்ளது.