இன்றைக்கு சந்தைக்கு வந்துள்ள மாருதி சுசுகியின் புதிய விக்டோரிஸ் எஸ்யூவி மாடலை BNCAP சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் முதல் மாருதி மாடலாக ADAS பாதுகாப்புடன் குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் என இருவர் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.
குறிப்பாக விக்டோரிஸின் சோதனை முடிவுகளில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32-ல் 31.66 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49-ல் 43.00 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
மாருதியின் அரினா டீலர்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள விக்டோரிஸில் 6 ஏர்பேக்குகளை பெற்று மற்ற அடிப்படையான பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுடன் ADAS சார்ந்தவற்றை பெற்றுள்ளது.
ஓட்டுநரின் மார்பு மற்றும் முழங்கால் ஆகியவற்றுக்கு சிறப்பான பாதுகாப்பு ஓட்டுநருக்கு தலை, கழுத்து மற்றும் இடுப்பு பாதுகாப்பு மிக நன்றாக உள்ளது. கூடுதலாக முன்புற பயணி அனைத்து உடல் பாகங்களுக்கும் நல்ல பாதுகாபினை வழங்குவதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.
பக்கவாட்டு மோதலின் போது விக்டோரிஸ் முழு புள்ளிகளைப் 16/16 பெற்று OK என மதிப்பிடப்பட்டுள்ளது.
18 மாத குழந்தை மற்றும் 3 வயது குழந்தை டம்மிகள் கொண்டு சோதனை செய்த நிலையில் ISOFIX நங்கூரங்கள் மற்றும் சப்போர்ட் மூலம் கால்கள் பாதுகாக்கப்பட்ட பின்புற வெளிப்புற இருக்கைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
டைனமிக் சோதனை (24/24) மற்றும் CRS நிறுவல் சோதனை (12/12) ஆகியவற்றில் முழு புள்ளிகளையும், வாகன மதிப்பீட்டு சோதனையில் 13-ல் 7 புள்ளிகளையும் மட்டும் பெற்றது.
குறிப்பாக தற்பொழுது இந்திய சந்தைக்கு வருகின்ற கார்கள் BNCAP சோதனைக்கு உட்படுதப்பட்டு வரும் நிலையில் மாருதியின் விக்டோரிஸ் 5 நட்சத்திரத்தை பெற்றிருப்பது மாருதிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.