செப்டம்பர் 22ல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் 350ccக்கு குறைந்த இருசக்கர வாகனங்களில் குறிப்பாக ஹீரோ ஸ்பிளெண்டர்+ , HF டீலக்ஸ், ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர், ஆக்சஸ், டெஸ்டினி உள்ளிட்ட மாடல்களுடன் ஷைன், எஸ்பி 125, யூனிகார்ன் பல்சர், அப்பாச்சி, எக்ஸ்ட்ரீம், எக்ஸ்பல்ஸ் 210, டியூக் 250, டியூக் 160, டியூக் 200, யமஹா R15, MT-15, ஜிக்ஸர் என பலவற்றுடன் ராயல் என்ஃபீல்டு புல்லட், கிளாசிக் 350 ஆகியவற்றின் விலை ரூ.6,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை வரி குறைக்கப்படலாம்.
இந்த விலை குறைப்பில் ஹோண்டா ஹைனெஸ் 350, ஜாவா, யெஸ்டி, ரோனின் போன்ற மாடல்களும் பலன் பெற உள்ளது.
அதே நேரத்தில் 350ccக்கு கூடுதலான மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % வரி ஜிஎஸ்டி விதிப்பால், பல்சர் என்எஸ் 400, டிரையம்ப் 400, டியூக் 390, ஹிமாலயன் 450, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440, சூப்பர் மீட்டியோர் 650, கிளாசிக் 650 போன்ற மாடல்கள் ரூ.17,000 முதல் அதிகபட்மாக ரூ. 60,000 வரையும் பிரீமியம் விலை கொண்ட 10 லட்சத்துக்கும் கூடுதலான விலையுள்ள மாடல்கள் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
18% வரி குறைப்பால் 1200cc பெட்ரோல் அல்லது 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள கார்கள், எஸ்யூவி, 1500cc டீசல் அல்லது 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள கார்கள் எஸ்யூவிகளும் விலை குறைய உள்ளது. குறிப்பாக ஆல்டோ, நெக்ஸான், செலிரியோ, கைலாக், XUV 3XO, டியாகோ, ஐ20 போன்றவை குறைய உள்ளது.
ஆனால் மாருதியின் பிரெஸ்ஸா விலை உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பிரெஸ்ஸா 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தில் அமைந்தாலும் அந்த மாடலில் உள்ள பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர் ஆகும்.
18 % வரியால் 40,000 ரூபாய் முதல் ரூ.2 லட்சம் வரை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் சில உயர்ரக எஸ்யூவிகள் ஸ்கார்பியோ, ஃபார்ச்சூனர் போன்றவை விலை 10 % வரி குறையகூடும் இதனால் 2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை குறையலாம். பல ஆடம்பர கார்களின் விலை கூடுதலாக விலை குறையலாம்.
ஆனால், ஹூண்டாய் கிரெட்டா, எலிவேட் போன்ற மாடல்களுடன் இதன் போட்டியாளல்களும் 40% ஆக மாறியுள்ளதால் விலை 9 % வரை உயர உள்ளது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள மாடல்கள் பிரபலத்தின் அடிப்படையில் பல்வேறு மாடல்கள் ஜிஎஸ்டி வரி குறைப்பின் நன்மைகளும், விலை உயர்வுகளையும் சந்திக்க உள்ளது.