இந்தியாவில் கூபே ஸ்டைலில் கிடைக்கின்ற பட்ஜெட் விலையிலான Basalt X காரில் பல்வேறு நவீன அம்சங்களை பெற்றதாகவும், பாதுகாப்பு சார்ந்த மேம்பாடினை பெற்று ரூ.9.62 லட்சம் முதல் ரூ.17.82 லட்சம் வரை தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது.
பாசால்ட்டில் You, Plus, Max என மூன்று வேரியண்டின் அடிப்படையில் 1.2 NA என்ஜின் மற்றும் 1.2 டர்போ பெட்ரோல் என இருவிதமான ஆப்ஷனை பெற்றுள்ளது.
Citroen Basalt X on-Road Price in Tamil Nadu
சிட்ரோயன் பாசால்ட் மற்றும் பாசால்ட் எக்ஸ் என இரு விதமாக ஒட்டுமொத்த வேரியண்ட் எண்ணிக்கை 10 விதமாக கிடைக்கின்ற, சாதாரண NA என்ஜின் விலை ரூ.9.62 லட்சம் முதல் ரூ.11.34 லட்சம் வரையும், டர்போ பெட்ரோல் மேனுவல் ரூ.13.65 லட்சம் முதல் ரூ.16.08 லட்சம் வரையும் ஆட்டோமேட்டிக் டர்போ ரூ.15.16 லட்சம் முதல் ரூ.17.82 லட்சம் வரை அமைந்துள்ளது.
Variant | Ex-showroom Price | On-road Price (Approx.) |
---|---|---|
You | ₹ 7,95,000 | ₹ 9,61,897 |
Plus | ₹ 9,42,000 | ₹ 11,34,060 |
Plus Turbo | ₹ 10,82,000 | ₹ 13,62,760 |
Max Turbo | ₹ 11,62,500 | ₹ 14,61,750 |
Max Turbo Dual Tone | ₹ 11,83,500 | ₹ 14,91,530 |
Plus Turbo AT | ₹ 12,07,000 | ₹ 15,29,260 |
Max Turbo AT | ₹ 12,89,500 | ₹ 16,18,610 |
Max Turbo AT Dual Tone | ₹ 13,10,500 | ₹ 16,45,390 |
Turbo Max Dark Edition | ₹ 12,80,000 | ₹ 16,09,465 |
Turbo AT Max Dark Edition | ₹ 14,10,000 | ₹ 17,81,889 |
கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை விபரம் தமிழ்நாட்டினை அடிப்படையாக கொண்டு, வரும் செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ஜிஎஸ்டி 2.0 வரிக்கு ஏற்புடையதாகும்.
கூடுதலாக ஹாலோ 360 டிகிரி கேமரா ஆப்ஷனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.25,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Citroen Basalt X வாங்கலமா.?
போட்டியாளர்களில் டாடா கர்வ் கடும் சவாலினை ஏற்படுத்தும் நிலையில் பாசால்ட் எக்ஸ் மாடலின் கிராஷ் டெஸ்ட் முடிவுகளில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்று டிசைன், சிறப்பான வசதிகள், இடவசதி, தரமான என்ஜின் என பலவற்றை கொண்டு அடிப்படையான வசதிகள் மட்டும் கொண்டுள்ளது.
டர்போ மாடல்கள் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் நிலையில் ஆட்டோமேட்டிக் நல்ல தேர்வாக அமையலாம்.
ஆனால், போதிய டீலர் எண்ணிக்கை இல்லாத நிலையில், விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் பாதிப்பு, உதிரிபாகங்கள் கிடைப்பதில் தாமதம், நவீன பாதுகாப்பு அம்சம் ADAS டாப் வேரியண்டில் கூட இல்லை, இந்திய சந்தைக்கு சன்ரூஃப் தேவையற்ற வசதிதான் ஆனால் போட்டியாளர்கள் பெற்றிருப்பதனால் வாடிக்கையாளர் பலரும் விரும்பும் நிலையில் ஆப்ஷனலாக கூட இல்லை.
என்ஜின் ஆப்ஷன்
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துவதுடன், ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
6 ஏர்பேக்குகளுடன் அடிப்படையாக பெற்று எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் , ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், TPMS, ஹாலோ 360-டிகிரி கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர் பாதுகாப்பு வசதி உள்ளது.
க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் ஸ்பீடு லிமிடெட்டர், CARA அசிஸ்டன்ஸ் , 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 40க்கும் மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களையும் பெறுகின்றது. 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டுள்ளது.