ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் 4 மீட்டருக்கு கூடுதலான நீளத்தில் எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 65வது ஆண்டு SIAM கூட்டத்தில் பங்கேற்ற குணால் பெஹ்ல் தெரிவித்துள்ளார்.
ET Auto தளத்துக்கு ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், துனை தலைவர் குணால் பெஹ்ல் அளித்த பேட்டியில், முன்பாக எலிவேட் அடிப்படையிலான எலக்ட்ரிக் மாடல் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுதைய சந்தையின் சூழலுக்கு ஏற்ப புதிய எலக்ட்ரிக் வாகனத்தை FY2026-2027 நிதியாண்டில் 4 மீட்டருக்கு கூடுதலான நீளத்தை பெற்ற புதிய மாடலாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தியாவில் தற்பொழுது ஹோண்டா கார்ஸ் அமேஸ், எலிவேட் மற்றும் சிட்டி போன்ற கார்களின் மூலம் பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் கூடுதலாக டீலர்கள் மூலம் சிஎன்ஜி ஆப்ஷனை ரெட்ரோஃபிட்மென்ட் முறையில் வழங்கி வருகின்றது.