ஜிஎஸ்டி 2.0 வரி நடைமுறை செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ள டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஏஸ், ஏஸ் புரோ, இன்ட்ரா போன்ற சிறிய வர்த்தக ரக வாகனங்கள் மற்றும் யோதா பிக்கப் டிரக்குகளை செப்டம்பர் 22க்கு முன்னர் முன்பதிவு, மற்றும் செப்டம்பர் 30க்கு முன்பாக டெலிவரி எடுப்பவர்களுக்கு சிறப்பு சலுகை பின் வருமாறு வழங்குகின்றது.
32 அங்குல LED டிவியின் உறுதியான பரிசு மற்றும் கூடுதலாக மற்ற சலுகைகள் என மொத்தமாக ரூ.65,000 வரையிலான சலுகை கிடைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. டீசல், பெட்ரோல், அல்லது இரட்டை எரிபொருள் எனப்படுகின்ற சிஎன்ஜி ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும்.
ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களுக்கு ஜிஎஸ்டி சலுகையை அறிவித்துள்ள நிலையில், இலகுரக டிரக்குகள் மற்றும் பிக்கப் வாகனங்களுக்கு புதிய ஆரம்ப விலையை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏஸ் புரோ டிரக்கின் ஆரம்ப விலை ரூ.3.67 லட்சம், ஏஸ் டிரக்கின் ஆரம்ப விலை ரூ.4.42 லட்சமும், இன்ட்ரா டிரக்குகளின் ஆரம்ப நிலை மாடல் ரூ. 7.41 லட்சத்திலும், இறுதியாக பிக்கப் யோதா விலை ரூ.9.16 லட்சத்தில் துவங்குவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
Product | New Prices (Rs.) from 22nd Sep 2025 |
---|---|
Ace Pro | 3,67,000 ஆரம்ப விலை |
Ace | 4,42,000 ஆரம்ப விலை |
Intra | 7,41,000 ஆரம்ப விலை |
Yodha | 9,16,000 ஆரம்ப விலை |
நாட்டின் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சலுகைகளை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவித்து வருகின்றனர்.