18% ஜிஎஸ்டி வரியாக மாற்றப்பட்டுள்ள 350சிசிக்கு குறைந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் இடம்பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவன புல்லட் 350, கிளாசிக் 350, மீட்டியோர் 350, ஹண்டர் 350 மற்றும் கோன் கிளாசிக் 350 ஆகியவற்றின் விலை ரூ. 12,260 முதல் ரூ.19,665 வரை குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இந்நிறுவன 450சிசி மற்றும் 650 சிசி பைக்குகள் ரூ.15,131 முதல் ரூ.29,486 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலில் ராயல் என்ஃபீல்டு குறைந்த விலை ஹண்டர் 350 பைக்கின் விலை ரூ.12,260 முதல்
Hunter | Factory | 149900 | 137640 | -12260 |
Hunter | Dapper & Rio | 176750 | 162292 | -14458 |
Hunter | Rebel/London/Tokyo | 181750 | 166883 | -14867 |
உலகில் மிக நீண்ட காலமாக உற்பத்தியில் உள்ள பிரசத்தி பெற்ற புல்லட் 350 விலை ரூ.14,464 முதல் அதிகபட்சமா ரூ.18,057 வரை ஜிஎஸ்டி 2.0 மூலம் குறைந்துள்ளது.
Bullet | Battalion | 176625 | 162161 | -14464 |
Bullet | Military | 177316 | 162795 | -14521 |
Bullet | Standard | 201707 | 185187 | -16520 |
Bullet | Black Gold | 220466 | 202409 | -18057 |
உலகின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 ரெட்ரோ மோட்டார்சைக்கிள் விலை ரூ.16,135 முதல் ரூ.19,222 வரையும்
Classic | Redditch SC | 197253 | 181118 | -16135 |
Classic | Halcyon SC | 200157 | 183784 | -16373 |
Classic | Madras Red & Jodhpur Blue | 203813 | 187141 | -16672 |
Classic | Medallion Bronze | 208415 | 191366 | -17049 |
Classic | Commando Sand | 220669 | 202617 | -18052 |
Classic | Gun Grey & Stealth Black | 229866 | 211062 | -18804 |
Classic | Emerald Green | 234972 | 215750 | -19222 |
அடுத்து ராயல் என்ஃபீல்டின் மீட்டியோர் 350 விலை ரூ.17,037 முதல் ரூ.19,024 வரை சரிந்துள்ளது.
Meteor | Fireball | 208270 | 191233 | -17037 |
Meteor | Stellar | 218385 | 200520 | -17865 |
Meteor | Aurora | 222430 | 204234 | -18196 |
Meteor | Supernova | 232545 | 213521 | -19024 |
இந்நிறுவனத்தின் விலை உயர்ந்த 350சிசி மாடலாக உள்ள கோன் கிளாசிக் 350 விலை ரூ.19,417 முதல் ரூ.19,665 வரை குறைந்துள்ளது.
Goan Classic | Purple Haze | 237351 | 217934 | -19417 |
Goan Classic | Shack black | 237351 | 217934 | -19417 |
Goan Classic | Rave Red | 240381 | 220716 | -19665 |
Goan Classic | Trip Teal | 240381 | 220716 | -19665 |