கடந்த 2021 ஆம் ஆண்டு உற்பத்தி துவங்கிய ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் கிருஷ்ணகிரி தொழிற்சாலையின் உற்பத்தி எண்ணிக்கை 4 ஆண்டுகளுக்குள் 10,00,000 இலக்கை ரோட்ஸ்டெர் X+ எலக்ட்ரிக் பைக்கை உற்பத்தி செய்து வெற்றிகரமாக கடந்துள்ளது.
10 லட்சமாவது மாடலாக தயாரிக்கப்பட்ட பைக்கில் சிறப்பு பதிப்பாக ஓலா நிறுவனம் ரோட்ஸ்டர் X+ மாடலை நீல நிறத்தில் கொடுத்து, டூயல் டோன் இருக்கை மற்றும் பேட்டரி பேக்கில் சிவப்பு நிறத்தை சிறப்பம்சங்களுடன் உள்ளது.
மிக முக்கியமாக மறுசுழற்சி செய்யப்பட்ட காப்பர் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பேட்ஜ்கள் மற்றும் எலக்ட்ரோபிளேட்டட் ஹேண்டில் பார் முனைகளும் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்த ஓலா நிறுவனம், தற்பொழுது கடும் பின்னடைவை சந்திக்க துவங்கியுள்ளது, முக்கியமாக சர்வீஸ் தொடர்பான பிரச்சனைகள், பல்வேறு குறைபாடுகள் என பல காரணங்களால் சந்தையில் கடும் சிரமத்தை எதிர்கொள்ளுகின்றது.
அதே நேரத்தில் டிவிஎஸ், பஜாஜ், ஏதெர் , ஹீரோ விடா போன்றவை அமோக வரவேற்பினை பெற துவங்கியுள்ளது.