ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாட்டின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளராக உள்ள நிலையில் 125 மில்லியன் அல்லது 12.5 கோடி விற்பனை எண்ணிக்கையை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ஸ்பிளெண்டர்+, பேஷன்+ மற்றும் விடா VX2 என மூன்று மாடல்களிலும் சிறப்பு எடிசைனை வெளியிட உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக கிரே நிறத்தை பெற்று புதிய பாடி கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டு 125 மில்லியன் பேட்ஜிங் பெற்றிருக்கும், மற்றபடி அடிப்படையான மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றங்களும் இல்லை.
சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையிலான E20 ஆதரவை பெற்ற OBD-2B மேம்பாட்டினை 7.91 bhp மற்றும் 8.05 Nm டார்க் வழங்கும் 97.2cc என்ஜின் பெற்று 4 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும்.
கூடுதலாக ஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிராண்டான விடா ஸ்கூட்டரான VX2 பிளஸ் அடிப்படையில் பாடி கிராபிக்ஸ் கூடுதலாக பெற்றிருக்கும், மற்றபடி ரேஞ்ச் உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த சிறப்பு 125 மில்லியன் எடிசனின் அதிகாரப்பூர்வ விலை பட்டியலை ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் அறிவிக்க உள்ளது.